தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார் சூரி. இவர் முதன் முதலாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். இவருக்கு முதல் படமே மிக பெரிய பெயரை வாங்கி தந்தது. இதை அடுத்து சூரி நடித்த ‘கருடன்’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனையும் செய்திருந்தது. இதை சூரி நடித்து இருந்த படம் ‘கொட்டுக்காளி’.

இப்படத்தை இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே ‘கூலாங்கல்’ என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது சூரி அவர்கள் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் மே 1ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
சூரி திரைப்பயணம்:
இதை அடுத்து தற்போது சூர்யா அவர்கள் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை எல்ரெட் குமாரின் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கிரியேட்டிவிட்டி தயாரிப்பாளராக வெற்றிமாறன் பங்களிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தினுடைய டைட்டில் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்று இருந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி, இந்த படத்தினுடைய தொடக்கத்திலேயே பர்ஸ்ட் லுக் போஸ்டர் விழாவை பிரம்மாண்டமாக நடத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

மண்டாடி படம்:
நான் ரொம்ப கொடுத்து வைத்தவன். இது எல்லாத்துக்கும் காரணம் வெற்றிமாறன் அண்ணன் தான். எல்லா மேடைகளிலும் இதை நான் சொல்லுவேன். சுசீந்திரன் அண்ணன் எனக்கு வாய்ப்பு கொடுத்து பல படங்களில் நடித்தேன். அதற்கு பிறகு வெற்றிமாறன் அண்ணன் என் மீது வைத்த நம்பிக்கை தான், அவர் கொடுத்த வாய்ப்பில் கதாநாயகனாக மாறியிருக்கிறேன். பெயிண்டராக இருந்த நடிகராக மாறி இதுவரைக்கும் என் தகுதிக்கு மீறி நல்லா சம்பாதித்து விட்டேன். இனி எனக்கு பிடித்த மாதிரி நல்ல நல்ல கதையுடன் படங்கள் பண்ணினால் போதும். கலைத்தாய் எனக்கு வாய்ப்புகள் கொடுத்தால் நல்லா வைத்திருந்தாலே போதும்.

செய்தியாளர் சந்திப்பில் சூரி:
எல்ரெட் குமார் அண்ணன் உடன் திரும்பத் திரும்ப வேலை பார்ப்பது ரொம்ப சந்தோசம். எனக்கு எப்பவும் துணையாக வெற்றிமாறன் அண்ணன் இருக்கிறார். மாமன் படத்தோட கதை கூட வெற்றிமாறன் அண்ணனிடம் சொன்னேன். அவர் சில விஷயங்களை மாற்ற வேண்டும் என்று எனக்கு அறிவுரை கொடுத்தார். அந்த படமும் நன்றாக வந்திருக்கிறது. நல்ல குடும்ப கதை எல்லோருக்குமே பிடிக்கும்.
இந்தப் படத்திலுமே அவர் நிறைய அறிவுரைகளை சொல்லி இருக்கிறார். இந்த படமும் கண்டிப்பாக எல்லோருக்குமே பிடிக்கும். கருடன் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் தான் இசையமைக்கணும் என்று எவ்வளவோ முயற்சி செய்தேன். அது நடக்கவில்லை. மாமன் படத்துக்கும் ரொம்ப முயற்சி செய்தேன்.
https://www.youtube.com/watch?v=rdT0bmdUbkM
வெற்றிமாறன் பற்றி சொன்னது:
அதுவும் நடக்கவில்லை. இப்ப இந்த படத்தில் அது நிறைவேறி இருக்கிறது. ஜல்லிக்கட்டு மாதிரி தான் பாய்மர போட்டியும் அலைகளோட மல்லுக்கட்டி கடலில் நடக்கும் வீரமிக்க போட்டியை கதையாக கொண்டு எடுக்கிறார் இயக்குனர் மதிமாறன். இந்த தருணத்தில் அவருக்கும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன். கடல் சார்ந்த மக்களின் வீரமிக்க போட்டியை திரையில் கொண்டு வந்து எல்லோருக்கும் சொல்ல வேண்டும். ஜல்லிக்கட்டு மாதிரி நம்ம தமிழ் மக்களின் வீரமிக்க விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. இது படமாக எடுக்கிறோம். முதலில் மக்களுக்கு எங்களுடைய நன்றியை சொல்லி படத்தை தொடங்குகிறோம் என்று கூறியிருக்கிறார்






