தனது ரசிகரின் அம்மா உடல் நலம் குறித்து விசாரிக்க நடிகர் சூரி ஆட்டோவில் சென்றிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் சூரி. இவர் விவேக்,சந்தானத்திற்கு பிறகு காமெடியில் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சீரியலில் தான் இவர் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த நினைவிருக்கும் வரை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.
ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணில கபடி குழு படத்தின் மூலம் தான். அந்த படத்தில் இவர் புரோட்டா சாப்பிட்டதன் மூலம் தான் புரோட்டா சூரி என்றே பெயர் வந்தது. அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
விடுதலை பாகம் 1 :
விடுதலை படத்தில் விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். மேலும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இயமைத்திருக்கிறார்.
விடுதலை படம் குறித்த தகவல் :
மேலும், இந்த படம் கடந்த மாதம் 31 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே விடுதலைப் படத்தை கண்டு மகிழ்ந்து இருக்கின்றனர். இதனை அடுத்து சூரியின் விடுதலை 2 படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. அதன் பின் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாக இருக்கும் கூழாங்கல் என்ற படத்தில் சூரி ஹீரோவாக நடிக்கிறார்.
சூரி நடிக்கும் படம்:
இந்த படத்தை இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கு கொட்டுக்காளி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழுமலை என்ற படத்தில் சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படி விடுதலை படத்தை தொடர்ந்து சூரி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை பிரமாதமாக தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் ரசிகரின் அம்மாவை சந்திக்க சூரி சென்று இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகரின் அம்மாவை சந்திக்க சென்ற சூரி:
அதாவது, மதுரையில் உள்ள தன்னுடைய ரசிகரின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு சூரி அவர்கள் ஆட்டோவில் சென்றிருக்கிறார். பின் ரசிகரின் அம்மாவின் உடல் நலம் குறித்து விசாரித்து அவர்கள் வீட்டில் இருந்தவர்களிடம் சிறிது நேரம் கலகலப்பாக பேசி இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.