‘இந்த நாய் யாருன்னே தெரியாது’ பிறந்தநாளில் மரம் நட்டதை கூட திட்டிய ரசிகர்- கூலாக பதிலளித்த பிகில் பட நடிகர்.

0
2934
soundar
- Advertisement -

தமிழ் ஒரு சில துணை நடிகர்கள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகின்றனர். அந்த வகையில் நடிகர் சௌந்தர்ராஜன். தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான நடிகர் சசி குமார் நடித்த “சுந்தரபாண்டியன் ” படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர நடிகர் சௌந்தரராஜன்.குணசித்ர நடிகரான சௌந்தரராஜன் சுந்தரபாண்டியன் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பராக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தமிழ்நாடு பாரத் சினி அவார்ட்ஸ் சார்பில், சிறந்த அறிமுக வில்லன் நடிகர் என்று விருதும் வழங்கப்பட்டது .

-விளம்பரம்-

அதன் பின்னர் தமிழில் வெளியான பல்வேறு படங்களில் குணசித்ர நடிகராக நடித்துள்ளார். இவர் தமிழில் வெளியான “ஜிகிர்தண்டா, ரெக்க, தெறி ” போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். பல்வேறு படங்களில் இவரது நடிப்பு மிகவும் கவனிக்கப்பட்டு இருக்கிறது. சினிமாவை தாண்டி இவர் பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இதையும் பாருங்க : மயிருக்கு இருக்க மரியாதை நடிகனுக்கு இல்லை – விருது வாங்கி சென்ற யோகி பாபு குறித்து பேசிய பிரபல நடிகர்.

- Advertisement -

நடிகர் சௌந்தரராஜா, மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது பிறந்த நாளை கொண்டாடிய சௌந்தரராஜா, செடிகளை நட்டு தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 5வது ஆண்டு தொடக்க விழாவையும் சேர்த்து கொண்டாடினார்.

சௌந்தரராஜா

இவருக்கு பலரும் சமூக வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.அப்போது நெட்டிசன் ஒருவர் ‘இந்த நாய் யாருன்னே தெரியாது… என்று பதிவு செய்தார். இதற்கு ‘நான் நன்றி உள்ள நாய் நண்பா’ என்று நடிகர் சௌந்தரராஜா கூலாக பதில் அளித்து இருக்கிறார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement