ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டிமேளம். இந்த தொடரில் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் சிபு சூர்யன். இந்த சீரியலில் நடிகர் பொன்வண்ணன், பிரவீனா, சாயா சிங் உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் கடந்த சில தினங்களாக இந்த தொடரில் இருந்து ஹீரோ வெற்றி கதாபாத்திரத்தில் நடித்த சிபு சூர்யன் விலகி இருக்கும் தகவல் தான் வைரலாகி இருக்கிறது. சீரியல் விறுவிறுப்பாக செல்லும் நேரத்தில் சிபு வெளியேறியது பலருக்குமே பேரதிர்ச்சி தான்.

இவர் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மேலும், இவருக்கு பதில் இந்த தொடரில் யாரடி நீ மோகினி, வானத்தைப்போல போன்ற தொடர்களில் நடித்த ஸ்ரீகுமார் தான் நடிக்கிறார். மேலும், நடிகர் ஸ்ரீகுமார் கெட்டி மேளம் சீரியலில் கமிட்டானது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஸ்ரீகுமார் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், எல்லோருக்கும் வணக்கம். நான் இப்போது கெட்டிமேளம் சீரியலில் வெற்றி கதாபாத்திரத்தில் ரீப்ளேஸ்மென்ட் ஆகியிருக்கிறேன்.
கெட்டிமேளம் சீரியல்:
நான் ஒரு நல்ல சீரியல், நல்ல ப்ரொடியூசர், யாரடி நீ மோகினி அப்புறம் ஜீ தமிழில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு முன்னாடி நடித்த சிபி சூரியனுக்கு பதில் நான் ரீப்ளேஸ் ஆகியிருக்கிறேன். அவர் ரொம்ப நல்லா நடித்திருந்தார். அவர் என்னைவிட நல்லாவும் இருப்பார். ஆனால், அந்த அளவுக்கு முடியலைன்னாலும் என்னால் என்ன முடியுமோ, எனக்கு என்ன தெரியுமோ அந்த மாதிரி இந்த கதாபாத்திரத்திற்கு ஜஸ்டிபிகேஷன் பண்ணுவேன். பொதுவாக ஒருத்தருக்கு முன்னாடி நடித்திருந்தவர்களை பிடிக்கும். அது நான் தப்பு சொல்லவில்லை. ஏன்னா, எல்லோருக்குமே என்னை பிடிக்கணும் என்று அவசியம் இல்லை. ஆனால், அவர் ஒரு முடிவு எடுத்து இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அதில் நான் தலையிட முடியாது.

ஸ்ரீகுமார் பதிவு:
என்னை நடிக்கிறீங்களான்னு கேட்டப்ப, நான் சில விஷயங்கள் கேட்டுக் கொண்டு இதுதான் காரணம் அப்படின்னு சொன்னதுக்கு பிறகு தான் நடிக்க ஒத்துக் கொண்டேன். யார் வாய்ப்பையும் நான் பிடுங்கவில்லை. அவர் போனதுக்கு பிறகு இன்னொருத்தர் யாரையாவது நடிக்க கூப்பிடுவதற்கு என்னை கூப்பிட்டாங்க. வேலை தானே செய்கிறோம். உழைத்து தானே சாப்பிடுகிறோம், தப்பு கிடையாது. அது யாரடி நீ மோகினி ஆக இருக்கட்டும், வானத்தைப்போல இருக்கட்டும் ஒரு நடிகர் போன பிறகு அந்த சீரியல் நிற்கக்கூடாது. ஒரு சீரியல் நம்பி நிறைய குடும்பங்கள் இருக்கு. அது மட்டும் இல்லாமல் எனக்கும் வாழ்வாதாரம் இதுதான். அதனால் தான் ரீப்ளேஸ்மென்ட் ஆக இருந்தாலும் நடிக்கிறேன்.
View this post on Instagram
சிபு சூர்யன் பதில்:
அதில் நிறைய டென்ஷனும் இருக்கும். சிலபேர் நம்மை திட்டுவார்கள். சிலருக்கு நம்மை பிடிக்காது. ஆனால், அதற்கெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. என்னால் முடிந்த அளவுக்கு இந்த கதாபாத்திரத்திற்கு ஜஸ்டிபிகேஷன் கொடுக்கிறேன். உண்மையாக உழைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதற்கு சீரியலில் நடித்த சிபு சூரியன், நான் உங்கள் நடிப்பை பார்த்தேன். முன்னதாகவே சன் டிவியில் உங்களுடைய பெர்ஃபார்மன்ஸ் பார்த்திருக்கிறேன். நீங்கள் உண்மையில் திறமையானவர். நானும் இதே துறையில் பணிபுரிந்து இருக்கிறேன். நீங்கள் பார்க்க அழகானவர். உங்கள் நடிப்பு குறிப்பிடத்தக்கது என்று கூறி பதில் அளித்து இருக்கிறார்.






