தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஸ்ரீகாந்த். கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "ரோஜா" கூட்டம் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தனது முதல் படத்திலேயே பல பெண் ரசிகைகள் மத்தியில் சாக்லேட் பாய் பட்டத்தை பெற்றரவர். குறிப்பாக சொல்லப்போனால் அரவிந்த் சாமி, அப்பாஸ், மாதவன் போன்ற நடிகர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்ற பெயரெடுத்த நடிகர்களில் நடிகர் ஸ்ரீகாந்தும் ஒருவர்.

ரோஜா கூட்டம் படத்திற்கு பிறகு பல தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். தமிழில் சாக்லேட் பாய் என்ற பெயரை எடுத்ததால் அந்த பெயரை மாற்ற பல வித்தியாசமான கதை களத்தில் நடித்து வந்தார். இருப்பினும் இவர் நடித்த எந்த படமும் பெயர் சொல்லும் அளவிற்கு ஓடியது இல்லை. நடிகை ஸ்னேஹாவுடன் பல ஆண்டுகள் காதல் கிசுகிசுக்களில் விழுந்து வந்தார் ஸ்ரீகாந்த்.
ஆனால், இவர்கள் இருவரின் காதலும் கிசுகிசுவாகவே சென்றது. இப்படி ஒரு நிலையில் 2007 ஆம் ஆண்டு வந்தனா என்ற தெலுகு குடும்பத்தை சார்ந்த வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகனும் , மகளும் பிறந்தனர். இந்த நிலையில் இன்று ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மகனும் ஒரே நாளில் பிறந்தநாளை கொண்டாடி இறுகின்றனர்.

அந்த புகைப்படங்களை ஸ்ரீகாந்த் மனைவி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திருமணத்திற்கு பின்னர் இவர் இவர் நடித்த மிகப்பெரிய படம் என்றால் அது விஜய்யுடன் நடித்த 'நண்பன்' படம் மட்டும் தான். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீகாந்த் சினிமாவில் தான் தவறவிட்ட வாய்ப்பு குறித்து பேசியுள்ளார். அதில் சினிமாவில் அதிகபட்ச இழப்புகள் ஒருவருக்கு ஏற்பட்டு இருக்கும் என்றால் அது எனக்கு தான் இருக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறி இருந்தார்.
அதில் பேசிய அவர், எத்தனையோ பிரச்சனைகளை தாண்டி நான் தற்போதும் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அது கடவுள் மற்றும் ரசிகர்களால் தான் என்று நான் நினைக்கிறேன். சினிமாவில் உழைத்தவர்கள் பலர் இருந்தாலும் அவர்களுக்கு சரியான நேரத்தில் வாய்ப்புகள் கிடைக்கும் போதுதான் அது அவர்களை சரியான இடத்திற்கு கொண்டு செல்லும். என்னுடைய முதல் படம் காதல் வைரஸ் படமாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு வருடம் அதற்காக நான் பயிற்சி எடுத்து இருக்கும்போது அந்த படத்தில் இருந்து நான் வெளியேறிய போது நான் மிகவும் உடைந்து போனேன். அதன் பின்னர் பாரதிராஜாவால் நான் அறிமுகமாகி இருக்கவேண்டும். அது வேறு ஒரு காரணத்தினால் மிஸ் ஆகிவிட்டது. அதன் பின்னர் படத்தில் நான் நடிக்க வேண்டி இருந்தது அதுவும் மிஸ் ஆகிவிட்டது இவையெல்லாம் தாண்டி தான் நான் ரோஜாக்கூட்டம் படத்தில் நடித்தேன் என்று கூறியுள்ளார்.






