நடிகை சினேகாவுக்கு ஏற்பட்ட விபத்து குறித்து பிரபல நடிகர் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ‘புன்னகை அரசி’ என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சினேகா. இந்த நிலையில் சினேகாவிற்கு ஏற்பட்ட விபத்து குறித்து பிரபல நடிகர் கொடுத்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘ஏப்ரல் மாதத்தில்’ என்ற படத்தில் நானும் சினேகாவும் சேர்ந்து நடித்து இருந்தோம்.
அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் எனக்கும் சினேகாவுக்கும் விபத்து ஏற்பட்டது. இரண்டு பேருமே வெவ்வேறு ஹாஸ்பிடலில் சிகிச்சை எடுத்து இருந்தோம். சினேகாவிற்கு நடந்த விபத்தை நினைக்கும் போது இப்போதும் எனக்கு உடம்பு சிலிர்க்கிறது. கார் விபத்தால் சினேகா ரத்த வெள்ளத்தில் இருந்தார். அவருடைய முதுகெலும்பு உடைந்து போயிருக்கும் நிலையில் இருந்தார். கார் கதவுகள் திறக்க முடியாமல் கண்ணாடிகள் எல்லாம் உடைந்து போனது.
சினேகாவுக்கு ஏற்பட்ட விபத்து:
அந்த சம்பவத்தை என்னால் இப்போது கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு மோசமான நிலையில் சினேகா இருந்தார். அந்த சமயத்தில் தான் எனக்கும் விபத்து ஏற்பட்டிருந்தது. இருவருமே மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த பிறகுதான் ஏப்ரல் மாதத்தில் படத்தில் நடித்து முடித்தோம் என்று கூறி இருந்தார். சினேகா-ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து பார்த்திபன் கனவு, ஏப்ரல் மாதத்தில், போஸ் போன்ற படங்களில் நடித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சினேகா திரைப்பயணம்:
மேலும், சினேகா அவர்கள் தமிழ் சினிமாவில் உள்ள பல டாப் நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்து பின் வாய்ப்புகள் குறைந்தவுடன் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.
சினேகா குடும்பம்:
இதனிடையே பிரசன்னா- சினேகா இருவரும் காதலித்து வந்தார்கள். அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது விஹான் என்ற அழகான மகன் மற்றும் ஆத்யந்தா என்ற ஒரு அழகான மகளும் இருக்கிறார்கள். இப்படி கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக இருவரும் சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். திருமணத்திற்கு பின் சினேகா நடித்து கொண்டு வருகிறார்.
சினேகா குறித்த தகவல்:
அந்த வகையில் தற்போது சினேகா அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தில் நடித்திருக்கிறார். செப்டம்பர் ஐந்தாம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதால் படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து சினேகா அவர்கள் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி வெள்ளித்திரை, சின்னத்திரையில் பிஸியாக இருக்கும் சினேகா சொந்தமாக பிசினஸ் செய்து கொண்டு வருகிறார்.