நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடன் நடித்துள்ள ஹீரோயினுக்கு எதிராக வரும் ட்ரோல்களுக்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் கே. பாலச்சந்தர் இயக்கிய 'ஜன்னல் மரபு கவிதைகள்' என்ற சீரியலின் மூலம் தான் நடிகராக அறிமுகம் ஆகியிருந்தார். அதற்குப் பின் தான் இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். கடந்த 2002 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த 'ரோஜா கூட்டம்' என்ற படத்தின் மூலம் தான் இவர் நடிகர் ஆனார்.

இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் பல பெண் ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாய் பட்டத்தை பெற்றார். அதைத்தொடர்ந்து இவர் ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும், இவருக்கு சமீப காலமாக சரியான படங்கள் அமைவதில்லை, இவரால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் நீண்ட நாட்களுக்குப் பிறகு 'தினசரி' என்னும் படத்தில் நடித்திருக்கிறார்.
தினசரி படம்:
இப்படத்திற்கு ஹீரோயின் ஆக தயாரிப்பாளர் சிந்திய லூர்ட்தே நடிக்கிறார். இந்தப் படத்தில் அறிவிப்புகளும் பாடலும் வெளியான நிலையில் பலரும் ஸ்ரீகாந்த் மார்க்கெட் போனதால் தான் இந்த மாதிரியான ஹீரோயின்களுடன் எல்லாம் நடிக்கிறார் என அந்த நடிகையை ட்ரோல் செய்து வருகிறார்கள். இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார். அதில், சோசியல் மீடியாவுல நல்ல பக்கங்களும் இருக்கு கெட்ட பக்கங்களும் இருக்கு. இந்த சோசியல் மீடியா ட்ரோலுக்கு எல்லாம் நான் டிஸ்டர்ப் ஆக மாட்டேன்.
https://www.youtube.com/shorts/hH8Hm-Ev1DA
ஸ்ரீகாந்த் பேட்டி:
இங்க எல்லாரும் வெறும் நெகட்டிவ் சிந்தனையோடு தான் இருக்காங்க. எல்லாரும் மன அழுத்தத்துல இருக்காங்க. அதனால்தான் எல்லாரும் இந்த மாதிரி வெறுப்பை காட்டிட்டு இருக்காங்க. எனக்கு தெரிஞ்சு மக்கள் எல்லாரும் கொஞ்சம் அன்பாக இருந்தால் நல்லா இருக்கும் . அந்தப் பொண்ணுக்கு என்ன பிரச்சனை. அந்தப் படம் வந்ததும் பாருங்க அப்புறம் தெரியும். ரொம்ப நல்ல கண்டென்ட் இருக்கு அந்த படத்துல. அந்தப் படத்துக்கு இளையராஜா சார் தான் மியூசிக் போட்டு இருக்காரு. எனக்கு அந்த கதை ரொம்ப பிடிச்சி இருந்தது. அவங்க ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க.
ஸ்ரீகாந்த் கொடுத்த பதிலடி:
இங்க இவங்க தான் நடிக்கணும் இவங்களுக்கு அந்த தகுதி இல்ல என்று முடிவு செய்வது யாரு. அதை முடிவு செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. இது சுதந்திரமான உலகம். இவங்க இதை செய்யணும்னு சொல்வதற்கு மத்தவங்க யாரு. ஒரு ஹீரோயினா இப்படி தான் இருக்கணும்னு முடிவு செய்வது யாரு. இவங்கதான் சினிமாவுக்கு தகுதியானவங்கன்னு எப்படி சொல்றாங்க. இதுல நல்ல விஷயம் என்ன என்றால் எல்லா ட்ரோல்களையும் தாண்டி இப்போ அவங்க படத்துல நடிக்கிறாங்க. ஆனால், நீங்கள் தான் இன்னும் பேசிட்டே இருக்கீங்க.
https://www.youtube.com/shorts/CXdgnD7jse0
சோசியல் மீடியா குறித்து:
மேலும், தயவுசெய்து யாரும் பாகுபாடு காட்டாதீங்க. நாம எல்லாம் கொஞ்ச நாளா நிறவெறி புடிச்சி இருக்கோம். மத்தவங்க கிட்ட அதிகமாக பாகுபாடு காட்டிக்கொண்டிருக்கிறோம். எல்லாரையும் பாடி ஷேமிங் செஞ்சிட்டு இருக்கோம். தயவு செஞ்சு இந்த மாதிரி பண்ணாதீங்க. உங்களோட நேரத்தையும் சிந்தனையையும் நல்ல விஷயத்துக்கு உபயோகப்படுத்துங்க. நீங்க என்ன எழுதினாலும் எனக்கு கவலை இல்லை. நான் சோசியல் மீடியாவில் இருந்து விலகி 16 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று ஸ்ரீகாந்த் பதிலடி கொடுத்திருக்கிறார்.






