மிரட்டிய தயாரிப்பாளர், இனி என் பட வாய்ப்பு கொடுக்க மாட்டேன்னு கடுப்பான மணிரத்னம் – ஸ்ரீகாந்த் வாழ்வில் நடந்த சோகம்

0
131
- Advertisement -

தன்னுடைய படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கக்கூடாது என்று மணிரத்தினம் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். இவருடைய படைப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. கடைசியாக மணிரத்னம் இயக்கி இருந்த பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டது.

-விளம்பரம்-

இதை அடுத்து மணிரத்தினம்-கமல் கூட்டணியில் தக் லைப் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தினுடைய வேலைகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் மணிரத்னம்- ஸ்ரீகாந்த் இடையே நடந்த சண்டை குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஸ்ரீகாந்தை எந்த ஒரு படத்திலும் நடிக்க கூப்பிட மாட்டேன் என்று மணிரத்தினம் சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

மணிரத்தினம்-ஸ்ரீகாந்த் சர்ச்சை:

இது குறித்து பலருமே விவாதித்து இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஸ்ரீகாந்த், மணிரத்னம் என்னை படத்தில் நடிக்க கூப்பிட மாட்டேன் என்று சொன்னது உண்மை தான். காரணம், ஆயுத எழுத்து படத்தில் நடிகர் டெஸ்ட் ஷூட் நடந்தது. அதில் சூர்யா, சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க டெஸ்ட் பண்ணினார்கள். ஆனால், எனக்கு சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் என்பதால் மணிரத்தினம் சாரும் ஓகே சொல்லிவிட்டார்.

ஸ்ரீகாந்த் பேட்டி:

அதற்குப் பின் எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தால் நான் ஹாஸ்பிடலில் இருந்தேன். என்னுடைய முகம் எரிந்துவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நான் உடம்பு தேடி வந்தேன். மணிரத்தினம் சாரும் வெயிட் பண்ணிட்டு இருந்தார். அந்த சமயம் பார்த்து என்னுடைய படத்தின் தயாரிப்பாளர், நீங்கள் என்னுடைய படத்தில் எல்லாம் நடித்து முடித்து தான் மற்ற படத்தில் நடிக்க வேண்டும் இல்லையென்றால் நடிக்க விடமாட்டோம் என்று மிரட்டின மாதிரி பேசியிருந்தார்.

-விளம்பரம்-

மணிரத்தினம் சொன்னது:

இதனால் நான் ஆயுத எழுத்து படத்திற்கு வாங்கின காசையும் திருப்பிக் கொடுத்தேன். மணிரத்னம் சார், இவ்வளவு நாள் வெயிட் பண்ணியும் இந்த மாதிரி நீ செய்வது தவறு. இனிமேல் என்னுடைய படத்தில் நடிக்க உன்னை நான் கூப்பிட மாட்டேன் என்று கூறியதாக சொல்லி இருந்தார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஸ்ரீகாந்த். கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “ரோஜா” கூட்டம் என்ற படத்தில் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

ஸ்ரீகாந்த் குறித்த தகவல்:

இவர் தனது முதல் படத்திலேயே பல பெண் ரசிகைகள் மத்தியில் சாக்லேட் பாய் பட்டத்தை பெற்றரவர்.
ரோஜா கூட்டம் படத்திற்கு பிறகு இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். தமிழில் சாக்லேட் பாய் என்ற பெயரை எடுத்ததால் அந்த பெயரை என்ற பல வித்தியாசமான கதை களத்தில் நடித்து வந்தார். இருப்பினும் இவர் நடித்த எந்த படமும் பெயர் சொல்லும் அளவிற்கு ஓடியது இல்லை. கடந்த ஆண்டு இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த காபி வித் காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் கலவையான விமர்சனத்தை தான் பெற்றிருந்தது. தற்போதும் இவர் சில படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement