உருவாகும் தலைநகரம் 2. நாய் சேகர் இருக்காரா ? முழு விவரம் இதோ.

0
1297
thalainagaram
- Advertisement -

நடிகர் சுந்தர்.சி ஹீரோவாக நடித்து 2006-ம் ஆண்டு வெளிவந்த படம் தலைநகரம். இந்த படத்தின் மூலம் தான் சுந்தர்.சி ஹீரோ ஆனார். இந்த படத்தில் வடிவேலு, போஸ் வெங்கட், ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தாய் இயக்குனர் சுராஜ் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த படத்தின் வெற்றிக்கு வடிவேலுவின் காமெடியும் முக்கிய பங்கு வகித்தது. இந்நிலையில் இந்த தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் வி.இசட்.துரை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

சுந்தர்.சி – வி.இசட்.துரை இருவரும் ஏற்கெனவே இருட்டு என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தற்போது அமீரின் நாற்காலி படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் வி.இசட்.துரை. மேலும், கொரோனா ஊரடங்கு முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் தலைநகரம் 2 படத்தை துவங்க இருக்கிறார் வி.இசட்.துரை. ஊரடங்கில் தாடி வளர்த்து புதிய தோற்றத்துக்கு தயாராகி வருகிறார். விரைவில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் தலைநகரம் 2 படத்தில் வடிவேலு நடிப்பாரா?? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நகைசுவை நடிகராக திகழ்பவர் வடிவேலு. இவருடைய நகைச்சுவை பேச்சும், பாடி லாங்குவேசும் இன்றும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறது. இவர் மெர்சல், சிவலிங்கா ஆகிய படங்களுக்கு பின்னர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு அவர்கள் தலைவன் இருக்கின்றான் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தலைநகரம் படத்திலும் வடிவேலு நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் வி.இசட்.துரை அவர்கள் இதற்கு முன்னதாக முகவரி, காதல் சடுகுடு, தொட்டி ஜெயா உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement