வனிதாவை குறித்து நடிகர் சுனில் அளித்திருக்கும் அதிர்ச்சி தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் பிரபலமான நபர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டு இருக்கிறார். தற்போது வனிதா அவர்கள் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் இவருடைய முன்னாள் காதலர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் தான் ஹீரோவாக நடிக்கிறார்.
அதோடு இவர் தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். வனிதா உடைய நண்பர் தான் இந்த படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய பூஜை எல்லாம் போடப்பட்டது. இந்தப்படத்தில் ரவிகாந்த், ஷகீலா, பிரேம்ஜி, சுனில் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் வனிதாவின் மகள் ஜோவிகா தயாரிப்புப் பணிகளில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் இந்த படத்தில் நடித்த நடிகர் சுனில் திடீரென்று வெளியேறி இருக்கிறார்.
வனிதா-ராபர்ட் மாஸ்டர் படம்:
இவருக்கு பதில் நடிகர் ஸ்ரீமன் கமிட் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சுனில் நடித்த காட்சிகள் எல்லாம் மீண்டும் சூட் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்த போது, வனிதா என்றாலே வைரல் நியூஸ் தான். வனிதா- ராபர்ட் மாஸ்டர் ரெண்டு பேரும் சேர்ந்து மீண்டும் ஒரு கதையை ரெடி பண்ணி அமர்க்களமாக சூட்டிங் தொடங்கி இருந்தார்கள். இந்த படத்தை ராபர்ட் மாஸ்டர் இயக்குவதாக சொல்கிறார்கள். ஆனால், திடீரென்று படத்தில் சுனில் இல்லை என்றும், அவருக்கு பதில் ஸ்ரீமன் கமிட்டாகி இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
நடிகர் சுனில் விலகல் :
காரணம், இந்த படத்தை ராபர்ட் மாஸ்டர் இயக்குகிறார் என்று நினைத்து தான் சுனில் கமிட் ஆகி இருந்தார். ஆரம்பத்தில் மாஸ்டர் தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். ஆனால், அவரும் படத்தில் நடிப்பதால் அப்பப்ப டைரக்ஷனை வனிதாவிடம் விட்டிருக்கிறார். வனிதாவும் ஸ்கிரிப்ட் படி டைரக்ட் பண்ணாமல் தனக்கு என்ன தோணுகிறதோ அதை செய்தார். வனிதா உடைய சொதப்பலான டைரக்ஷனால் படத்தில் ஆரம்பத்திலிருந்து நடித்து வந்த சுனில் கிளைமாக்ஸ் காட்சிக்கு நடிக்க வர மறுத்து இருக்கிறார்.
சுனில் அளித்த பேட்டி :
வனிதா உடைய சூட்டிங் திட்டமிடல் சரி இல்லாததால் தான் அவர் வர மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் கடுப்பான வனிதா அவருக்கு பதிலாக நடிகர் ஸ்ரீமனை கமிட் செய்து ஏற்கனவே சுனில் நடித்திருந்த போஷனை எல்லாம் நீக்கிவிட்டு ரீ ஷூட் பண்ண தொடங்கியிருக்கிறார்கள். இதை அடுத்து இது தொடர்பாக நடிகர் சுனில், படத்தில் நான் கமிட் ஆனது உண்மைதான். ஆரம்பத்தில் நடித்துக் கொடுத்தேன். பிறகு சூட்டிங் ஷெட்யூலில் கொஞ்சம் பிரச்சனை ஏற்பட்டது.
வனிதா குறித்து சொன்னது :
மேலும், திட்டமிடல் சரியாக இல்லாததால் திடீர் திடீரென்று தேதியை கேட்டார்கள். அதனால் கிளைமாக்ஸ் எடுப்பதற்காக கேட்டபோது மற்ற படத்தில் கமிட்டாகி இருந்ததால் என்னிடம் தேதி இல்லை. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பண்ணி தருகிறேன் என்று சொன்னேன். ஆனால், அவர்கள் வெயிட் பண்ணல. நான் இப்ப படத்தில் இல்லை என்பது சோசியல் மீடியா மூலம் தான் எனக்கே தெரிந்தது. என்னிடம் இதுவரை எந்த ஒரு தகவலும் சொல்லவில்லை. அப்படியே பண்ணியிருந்தால் பண்ணிட்டு போகட்டும், ஒன்னும் பிரச்சனை இல்லை என்று கூறியிருக்கிறார்.