சுரேஷ் கோபி வெற்றியால் நடிகை நிமிஷா சஜயன் மீது சைபர் கிரைம் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு இருந்தது. இந்த 2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தது.
தமிழகத்தில் ஏப்ரல் 19 தேர்தல் நடந்தது. மேலும், பிரபலங்கள் பலருமே தேர்தலில் மும்முரமாக இறங்கி இருந்தார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியாகியிருந்தது. பாஜக தான் முதலிடத்தை பிடித்திருக்கிறது. மேலும், கேரளாவில் பாஜக சார்பாக போட்டியிட்ட நடிகர் சுரேஷ்கோபி வெற்றி பெற்றார். பொதுவாகவே கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே தான் போட்டிகள் அதிகமாக இருக்கும்.
சுரேஷ் கோபி வெற்றி:
இந்த இரண்டிலிருந்து ஏதாவது ஒன்றுதான் வெற்றி பெறும். ஆனால், முதல் முறையாக கேரளாவில் திருச்சூரில் பாஜக வேட்பாளராக சுரேஷ் கோபி களமிறங்கி வெற்றி பெற்றார். இது மிகப்பெரிய அளவில் சோசியல் மீடியாவில் பேசப்பட்டிருக்கிறது. இதை கேரளாவில் கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பாகவும் சோசியல் மீடியாவில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் பாஜகவை விமர்சித்து நடிகை நிமிஷா சஜயன் பேசிய கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
நிமிஷா சஜயன் சொன்ன கருத்து:
அதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்தத்தை பாஜக அமல்படுத்தியது. இதற்கு இந்தியா முழுவதுமே பல போராட்டங்கள் வெடித்திருந்தது. அந்த வகையில் கேரளாவிலும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நடிகை நிமிஷா சஜயன் போராடி இருந்தார். அப்போது அவர், திருச்சூரை கூட நாங்கள் தரமாட்டோம். இந்தியாவை அவர்களிடம் கொடுத்து விடுவோமா!என்றெல்லாம் பாஜகவை விமர்சித்து பேசியிருந்தார்.
நெட்டிசன்கள் விமர்சனம்:
அந்த சமயம் பார்த்து பாஜக சார்பில் நின்ற சுரேஷ் கோபியும் தேர்தலில் நின்று தோற்றுப் போயிருந்தார். பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது சுரேஷ்கோபி வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் நிமிஷா அப்போது பேசிய விஷயத்தை தற்போது சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிமிஷாவை கேலி செய்து சைபர் கிரைம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றார்கள். இன்னொரு பக்கம், நிமிஷா ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.
சுரேஷ் கோபி குறித்த தகவல்:
மலையாளத்தில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் சுரேஷ் கோபி. இவர் அதிகம் மலையாள மொழி படத்தில் தான் நடித்திருக்கிறார். இருந்தாலும், தமிழில் இவர் தீனா, சமஸ்தானம், தமிழரசன், ஐ போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் பின்னணி பாடகர் ஆவார். அதோடு இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் அரசியலிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.