அகரம் பவுண்டேசன் பற்றி நடிகர் சூர்யா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவர் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன், பிரபல நடிகர் கார்த்தியின் அண்ணன் ஆவார். மேலும், சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

இதை அடுத்து தற்போது நடிகர் சூர்யா அவர்கள் ரெட்ரோ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2D மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது.
ரெட்ரோ படம்:
இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், பிரகாஷ் ராஜ், நந்திதா தாஸ் உட்பட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் மே 1 கோடை விடுமுறையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான கனிமா பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

விழாவில் சூர்யா சொன்னது:
தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் இந்த படத்திற்கான நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இதில் கலந்துகொண்ட சூர்யா, சிரஞ்சீவியின் ரத்த வங்கிக்கு சென்ற பிறகுதான் எனக்கு அறக்கட்டளை தொடங்குவதற்கான எண்ணம் மனதிற்குள் ஏற்பட்டது. அது எல்லாம் இங்கு தான் தொடங்கியது. நிச்சயமாக இது உங்களால்தான். இந்த பயணத்தில் எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு ரொம்ப நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அகரம் அறக்கட்டளை தொடங்குவதற்கான சக்தியும் தைரியத்தையும் நீங்கள் தான் எனக்கு வழங்கினீர்கள்.
https://www.youtube.com/watch?v=g33UYDaSerA
அகரம் அறக்கட்டளை நிதி பற்றி சொன்னது:
உங்களால் தான் எங்களிடம் 8000 மேற்பட்ட முதல் தலைமுறை பட்டதாரிகள் இருக்கிறார்கள். மேலும் ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அகரம் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக நான் அமெரிக்கா சென்றிருந்தேன். 30 சதவீதத்திற்கும் அதிகமான நிதி அங்குள்ள தமிழ் மாணவர்களுக்கு தெலுங்கு பேசும் மக்களிடம் இருந்துதான் வந்தது. இப்போதும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் உதவுகிறார்கள். அவர்கள் ரொம்ப கனிவான, இதயம் கொண்ட அற்புதமான மக்கள். இப்போதும் இன்று வரை தமிழ் மக்களின் கல்விக்கு ஆதரிக்கிறார்கள்.

அகரம் அறக்கட்டளை:
நான் இதற்காகவே நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும், அகரம் அறக்கட்டளையின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் சூர்யா. 2006ஆம் ஆண்டு முதல் இவர் சமூக சேவையில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். இதில் பல மாணவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். ஏழ்மையால் கல்வி கற்க முடியாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்காக இவர் தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவி செய்து வருகிறார்கள். சமீபத்தில் சென்னை தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அகரம் பவுண்டேஷனின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.






