வித்தியாசமான மேக்கப், பல கெட்டப்கள், நாவலை தழுவிய கதை – சூர்யா42 படம் குறித்து வெளியான அப்டேட்.

0
327
- Advertisement -

சூர்யா 42 படத்தின் கதையை சூர்யாவே கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பல ஆண்டு காலமாக கோலிவுட்டில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா அவர்கள் ரோலக்ஸ் என்ற தோற்றத்தில் நடித்து இருந்தார். அதேபோல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி விளைவு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணியில் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

சூர்யா மற்றும் பாலா கூட்டணி:

இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. பாலா இயக்கத்தில் சூர்யா அவர்கள் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்திருந்தார். பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா– பாலா இணைந்து வணங்கான் என்ற படத்தில் பணியாற்றி வருவது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

சூர்யா நடிக்கும் படங்கள்:

அதற்கான பணிகள் மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது. இதை அடுத்து சூர்யா அவர்கள் வெற்றிமாறனின் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது சூர்யா அவர்கள் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். முதன் முறையாக சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு சூர்யா 42 என்று பெயர் இடப்பட்டுள்ளது. இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

-விளம்பரம்-

சூர்யா 42 படம்:

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த மாதம் தான் இந்த படத்தின் பூஜை தொடங்கப்பட்டது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. மேலும், இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இன்று தான் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்த படம் 3டில் உருவாக இருப்பதாக படக்குழு கூறி இருக்கின்றனர். இந்த படத்தை மொத்தம் பத்து மொழிகளில் வெளியிட உள்ளதாகவும் தெரியவந்து உள்ளது. இந்த படத்தின் மோசன் போஸ்டர் ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு மிரட்டும் வகையில் இருக்கிறது.

மோஷன் போஸ்டர்:

அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என பல வேடங்களில் நடிக்கிறார். இதற்காக ஸ்பெஷல் மேக்கப் டெஸ்ட்கள், மற்றும் போட்டோஷூட்கள் எடுத்த பிறகே இறுதி செய்யப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் எழுத்தாளரும், மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதியுள்ள ‘வேள்பாரி’ நாவலை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த விருமன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே சூர்யா கூறியிருந்தார். தற்போது அந்த வீடியோவை தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement