கங்குவா படத்தின் ட்ரைலர் தான் தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன், பிரபல நடிகர் கார்த்தியின் அண்ணன் ஆவார். மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.
https://www.youtube.com/watch?v=ajnCMSC4VPo
அந்த வகையில் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கங்குவா’. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்டு வருகிறது.
கங்குவா படம் :
வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்குனர் உருவாக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. வருகிற அக்டோபர் 10-ஆம் தேதி இந்த படம் திரையரங்களில் வெளியாக இருப்பதால் படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
#Kanguva #KanguvaTrailer
— 𝔸𝕁𝕀𝕋ℍ (@DilipDon07) August 12, 2024
Karthi cameo in Kanguva💥🔥🔥😱
cheetah🤯 pic.twitter.com/uyLeQSiA3U
படம் குறித்த தகவல்:
சமீபத்தில் தான் இந்த படத்தின் ‘ஆதி நெருப்பே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. மேலும், தமிழ் சினிமாவில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கங்குவா படம் வெளியாகும் அன்று தான் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் படமும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று மதியம் கங்குவா படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

படத்தின் ட்ரைலர்:
பிரம்மாண்டத்துடன், பின்னணி இசையில் மிரள வைக்கும் அளவிற்கு கங்குவா ட்ரைலர் இருக்கிறது. இதுவரை பார்த்திடாத கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். ட்ரைலரில் சூர்யாவின் வெறித்தனமான நடிப்பு மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. போர், ரத்தம், பகை, பழிக்குப் பழி என்று ஒட்டுமொத்த ட்ரெய்லரும் கலவரமாக இருக்கிறது . அதுமட்டுமில்லாமல் ட்ரைலர் வெளியான சில மணி நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
This shot & Karthi entry shot 🔥#KanguvaTrailer Looks promising 🔥🔥
— Raghu Charanism 🚁 (@RaghuCharanism7) August 12, 2024
Finally a well deserved Box-office success on the way @Suriya_offl #Kanguva pic.twitter.com/vvRJaEVYF6
நெட்டிசன் கருத்து:
இப்படி இருக்கும் நிலையில் கங்குவா படத்தில் நடிகர் கார்த்தி நடித்து இருக்கிறாரா? என்ற கேள்வி தான் தற்போது எழுந்திருக்கிறது. அதாவது, ட்ரைலரில் நடிகர் ஒருவர் வரும் என்ட்ரியை பார்த்து அது கார்த்தி தான் என்று கூறுகிறார்கள். அது உண்மையிலேயே ரசிகர்கள் decode செய்தது. அதில் வருவது கார்த்தியா? இல்ல வேற ஒரு நடிகரா? என்று தெரியவில்லை. தற்போது இந்த வீடியோ தான் ட்ரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.






