தன் உயரத்தை கிண்டல் செய்த தொகுப்பாளினிக்கு சூர்யா கொடுத்த பதிலடி !

0
10310
surya
- Advertisement -

சன் மியூசிக் தொலைக்காட்சியின் லைவ் ஸோவில் நடிகர் சூர்யாவை உயரம் குறைவானவர் என தரம் தாழ்ந்து விமர்சித்திருந்தனர் இரண்டு தொகுப்பாளினிகள். அனுஷ்காவுடன் நடித்த போதே ஸ்டூல் போட்டு நடித்தார், தற்போது அமிதாப் பச்சனுடன் நடிக்க போகிறார் அதற்கு இன்னும் பெரிய ஸ்டூல் போட்டுதான் நடிக்க வேண்டும் என சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்திருந்தனர் இருவரும்.

Niveditha-Sangeetha

இந்த செயலுக்கு நடிகர் சங்க தலைவர் விஷால் கண்டனம் தெரிவித்தார். இது முட்டாள் தனமான பேச்சு என கூறி இருந்தார். அதன் பின்னர் அதே சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருக்கும் மணிமேகலையும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் போட்டிருந்தார். மேலும், சூர்யாவின் ரசிகர்கள் பலரும் இதனால் கடுப்பாகி அவர்களின் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.

- Advertisement -

இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்ட சூரியா தற்போது பேசியுள்ளார்.
‘தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. ‘

என பதிலடி கொடுத்த்துள்ளார்.

மேலும், சூரியா ரசிகர்கள் சன் தொலைக்காட்சி மற்றும் சன் மியூசிக் ஆகிய தொலைக்காட்சி அலுவலகங்களை முற்றுகையிட தயாராகி போஸ்டர்கள் அடித்தனர். இதனால் நிலைமை கையை மீறி சென்றதை உணர்ந்த சூரியா, தனது ரசிகர்களையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement