தனது முன்னாள் மனைவி நித்யா தன் மீது அடுக்கி இருக்கும் புகார்களுக்கு தாடி பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே சோசியல் மீடியாவில் தாடி பாலாஜியின் குடும்ப பிரச்சனை தலைவிரித்து ஆடிக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. இவரின் மனைவி நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற மகள் இருக்கிறார். தாடி பாலாஜியும், நித்யாவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து நடனமாடிய போது தான் இவர்களுக்கு இடையே இருந்த குடும்பப் பிரச்சினை வெளிவந்தது.
அதன் பிறகு இவர்கள் இருவரும் தொடர்ந்து போலீஸ், கோர்ட் என்று அலைந்து கொண்டிருந்தது எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலானது. அதற்குப் பிறகு கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டது. ஆனால், இன்று வரை தாடி பாலாஜி தனியாகவும், நித்யா தன் மகள் போஷிகா உடன் தனியாகவும் தான் வாழ்ந்து வருகிறார்.
தாடி பாலாஜி மீது நித்யா புகார்:
இந்நிலையில், தாடி பாலாஜியின் முன்னாள் மனைவி நித்யா அவர் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில், விவாகரத்து பெரும்போது மகளின் படிப்புக்கு ஆகும் செலவை பாலாஜி ஏற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தற்போது மகள் போஷிகாவின் படிப்பு செலவுக்குச் பாலாஜி பணம் தருவதில்லை. தன் மகளை அனுப்பி கேட்டாலும் அவரை திட்டி அனுப்புகிறார் என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார். நித்யாவின் இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது தாடி பாலாஜி விளக்கமளித்துள்ளார். அதில், எப்போதும் என்னைக் குறித்து மீடியாவுக்கு தப்பாக சொல்லணும்
தாடி பாலாஜி விளக்கம்:
என் பெயரை கெடுக்கணும் என்கிற ஒரே நோக்கம்தான் நித்யாவுக்கு இருக்கிறது. கோர்ட்ல என் மகளின் படிப்பு கட்டணத்தை என்னை கட்டச் சொன்னது நிஜம்தான். அவங்க சொன்னதை விட பல மடங்கு கட்டணத்தை கடந்த ரெண்டு மூணு வருஷமா நான் கட்டி இருக்கிறேன். அதற்கான ரசீதெல்லாம் என்கிட்ட இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், நித்யா என் மகளை கவனித்துக் கொள்வதே இல்லை. என்னுடைய மகளை அவங்க அம்மா வீட்டுல விட்டுவிட்டு அடிக்கடி ஊருக்கு சென்று விடுகிறாள். எப்போதும் பெங்களூரு, ஹைதராபாத்ல தான் இருக்காங்க.
நித்யா என்ன சொன்னான்னு தெரியல:
இந்த விஷயம் எனக்கு தெரிய வந்ததும், தீபாவளிக்கு போஷிகா வீட்டுக்கு வந்தபோது இனிமேல் இங்கேயே இரு, இந்த வருஷம் பீஸ் கட்டக் கொஞ்சம் லேட் ஆகிவிட்டது. இன்னும் ரெண்டு நாளில் கட்டி விடுகிறேன் என்று சொன்னேன். அப்போது கூட எனது மகள் சரி என்று தான் சொன்னாள். அதற்குப் பிறகு வீட்டுக்குப் போய் நாய்க்கு சாப்பாடு வச்சுட்டு வரேன்னு போன கோஷிகா போஷிகா திரும்ப வரவே இல்லை. மேலும், தன்னுடைய போனை கூட சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சுட்டா. நித்யா என்ன சொன்னான்னு தெரியல. இதனால் என்ன ஆச்சு, என்ன பிரச்சனைன்னு தெரியாமல் தான் நான் அவங்க வீட்டுக்கு போனேன்.
என் கடமையைச் செய்வேன்:
ஆனால், வீடு பூட்டி இருந்ததால், பைத்தியக்காரன் மாதிரி தெருவுல நின்னுட்டு இருந்தேன். அதற்குப் பிறகுதான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி பேசினேன். ஆனா, நித்யா அதுக்குள்ள என் மேல புகார் கொடுத்து விட்டார். இப்போது என் மகள் ஒன்பதாம் வகுப்பு தான் படிக்கிறாள். என் பொண்ணு கிட்ட என்னை பத்தி ரொம்ப தப்பா சொல்லி இருக்கா. நித்யா எங்க வேணும்னா போகட்டும், என்ன வேணும்னாலும் பண்ணட்டும். ஆனா, என் மகள் வாழ்க்கையை மட்டும் கெடுக்க வேண்டாம். ஒரு தகப்பனாக என் மகளுக்கு நான் செய்ய வேண்டியதை நான் செய்ய தயாராக இருக்கிறேன் என்று தாடி பாலாஜி, நித்யா அளித்திருக்கும் புகாருக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.