ஜெமினி படத்தில் விக்ரமின் கையாக நடித்த நடிகர் மருத்துமனையில் கவைலைக்கிடம்.

0
12324
kai
- Advertisement -

சியான் விக்ரம் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான ஜெமினி திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து இருந்தது விக்ரம், கீரன், தாமு ,வையாபுரி போன்ற பலர் நடித்த. இந்த படம் முழுவதும் விக்ரமிற்கு வலது கையாக என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் தென்னவன், தற்போது உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Thennavan

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட இவர் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சென்னை வந்தார். பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான என் உயிர் தோழன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இரண்டாம் கதாநாயகனாக நடித்த நடிகர் தென்னவனுக்கு அதன்பின்னர் 5 ஆண்டுகள் கழித்துதான் வேலுச்சாமி என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து காணாமல் போன இவர் ஜெமினி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இதையும் பாருங்க : சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கும் தமிழிசைக்கு இப்படி ஒரு உறவு முறை இருக்கா ?

- Advertisement -

அந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ஜெமினி படத்திற்கு பின்னர் விருமாண்டி, சண்டக்கோழி, வாகை சூடவா, சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா, சண்டக்கோழி 2 போன்ற பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் தென்னவன். இறுதியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்டை திரைப் படத்திலும் நடித்திருந்தார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ராசாத்தி என்ற தொடரில் நடித்து வருகிறார் நடிகர் தென்னவன்.

Image result for actor thennavan"

இந்த நிலையில் நடிகர் தென்னவனுக்கு திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். மூளையில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரை சென்னை பொத்தேரி யிலுள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் தற்போது நடிகர் தனது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் , தென்னவனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

Advertisement