தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் டோவினோ தோமஸ். மலையாளத்தில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர் தான் டோவினோ தாமஸ். இவர் மலையாள மொழியில் பல படங்களில் நடித்து உள்ளார். மலையாளத்தில் இவர் நடிப்பில் வாரத்திற்கு ஒரு படம் ஆவது ரிலீஸ் செய்யப்படும். அந்த அளவுக்கு பிஸியாக இருக்கிற ஹீரோ. டோவினோ தாமஸ் அவர்கள் லிடியா என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே இவர்களுக்கு இசா தாமஸ் என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.
சமீபத்தில் தான் இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இவர் தனக்கு குழந்தை பிறந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் தற்போது பிறந்துள்ள தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கு இவர் பெயர் வைத்துள்ளார். இவர் வைத்த பெயரை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.
இதையும் பாருங்க : அப்போதே நஸ்ரியா கணவருடன் நடித்துள்ள தளபதி – எதில் தெரியுமா?
இது குறித்து நடிகர் டோவினோ தாமஸ் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, என்னுடைய ஆண் குழந்தைக்கு ‘டஹான் டோவினோ’ என்று பெயர் வைத்திருக்கிறேன். அவனை வீட்டில் நாங்கள் ‘ஹான்’ என்று தான் அழைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் நடிகர் டோவினோ தோமஸ் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து பலரும் இப்படி ஒரு பெயரா?? என்று கேட்டு வருகிறார்கள்.
தற்போது இவர் தமிழில் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டோவினோ தாமஸ் தற்போது நடித்து வரும் மின்னல் முரளி என்கிற படத்தின் சூட்டிங் கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்தப் படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணி எல்லாம் நடந்து வந்த போது நாடு முழுவதும் லாக் டவுன் ஆனது. லாக் டவுன் முடிந்ததும் மீண்டும் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. அருண் அனிருதன் என்பவர் தான் ஸ்கிரிப்ட் எழுதியுள்ளார். பல மொழிகளில் இந்த படம் உருவாகிறது .