வைதேகி காத்திருந்தால் படத்தில் ரேவதியின் தந்தையாக நடித்த நடிகர் ராகவேந்திரா காலமானார்.

0
10901
t-s-ragavendra
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர் டி எஸ் ராகவேந்திரா. இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட பாடகர், இசை அமைப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர். யாக சாலை, உயிர், படிக்காத பாடம் என்று மூன்று படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் 1984 ஆம் ஆண்டு விஜயகாந்த் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான வைதேகி காத்திருந்தாள் என்ற படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானர். இந்த படத்தில் இறுதியில் இடம் பெற்ற அழகு மலர் ஆட என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது.

-விளம்பரம்-
டி.எஸ்.ராகவேந்திரா

- Advertisement -

மேலும், இந்த பாடலின் இறுதியில் பாடிகொண்டே இவர் உயிரை விடும் காட்சியை இன்றளவும் மறக்க முடியாது. இதனால் தனது முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானர். வைதேகி காத்திருந்தால் படத்தை தொடர்ந்து இவர், சிந்து பைரவி, சின்னதம்பி, தர்மம் வெல்லும், கற்பூரமுல்லை, விக்ரம், அரிச்சந்திரா, நீவருவாய்என, காதலுடன் என்று பல படங்களில் நடித்து உள்ளார். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : டிடி,சித்ரா,அஞ்சனா என்று முன்னனி சின்னத்திரை பிரபலங்களை பின்னுக்குத்தள்ளிய லாஸ்லியா.

இறுதியாக கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘பொன் மேகலை’ என்ற பதில் நடித்திருந்தார். இவர் பின்னணி பாடகியான சுலோச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரின் இரண்டு மகளும் பாடகியாக திகழ்ந்து வருகிறார்கள். இப்போது கூட இவர் ரசிகர்கள் மத்தியில் நிலையாக இருக்கிறார். இந்நிலையில் பழம்பெரும் நடிகர் டி எஸ் ராகவேந்திரா அவர்கள் உடல் நலக்குறைவால் சென்னையில் திடீரென்று காலமானார்.

-விளம்பரம்-

இவருக்கு தற்போது 75 வயது ஆகிறது. இவரின் மரணச் செய்தியைக் கேட்டு கோலிவுட் வட்டாரம், ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியில் உள்ளார்கள். மேலும், இவரின் இறுதி ஊர்வலம் இன்று 2 மணி அளவில் நடக்க இருப்பதாக நடிகர் சங்கம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. இதனால் ஒட்டு மொத்த தமிழ் திரை உலகமே சோகத்தில் ஆழ்ந்து உள்ளது. பல பிரபலங்கள் நடிகர் டி எஸ் ராகவேந்திரா குடும்பத்திற்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement