இயக்குனர் பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அக்யூஸ்ட். இந்த படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். கிரைம் திரில்லர் பாணியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் கைதிகள் எல்லோரும் சிறைச்சாலையில் இருக்கிறார்கள். அவர்களை கோர்ட்டுக்கு கொண்டு செல்ல வேண்டிய வழியிலேயே மடக்கி கொல்ல முயற்சி நடக்கிறது. அந்த கைதியில் ஒருவராக ஹீரோ உதயா இருக்கிறார். இதற்கிடையில் அவரை பத்திரமாக கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கமிஷனர் உத்தரவிடுகிறார். இதனால் இன்ஸ்பெக்டர் தலைமையில் இரண்டு போலீஸ்காரர்கள் பொறுப்பேற்று உதயாவை அழைத்து வருகிறார்கள். அதில் ஒருவர் தான் அஜ்மல்.
இன்னொரு பக்கம் உதயாவை கொலையாளிகள் மட்டும் இல்லாமல் காவல்துறையை சேர்ந்தவர்களுமே கொல்ல நினைக்கிறார்கள். இதனால் உதயாவை கவமனாக பார்க்கிறார்கள். அப்போது காவல் அதிகாரி அஜ்மல் உயிருக்கும் ஆபத்து இருப்பது தெரிகிறது. கடைசியில் உதயாவை ஏன் கொல்ல முயற்சிக்கிறார்கள்? உதயா சிறைக்கு சென்றதற்கான காரணம் என்ன? அஜ்மலையும் கொல்ல நினைப்பதற்கு பின்னணி என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

படத்தில் ஹீரோ உதயா சீரியசான ரோலில் நடித்திருந்தாலும் ஜாலியாக தான் தன்னுடைய கதாபாத்திரத்தை கொண்டு சென்றிருக்கிறார். ஜெயிலில் கைதியாக இருக்கும் உதயாவை திட்டமிட்டு கொலை செய்கிறார்கள். அதை அவர் கணித்து தப்பிக்கும் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. இவரை அடுத்து கதாநாயகி ஜான்விகா உதயாவை காதலிக்கிறார். இருவருடைய கெமிஸ்ட்ரியும் நன்றாக இருக்கிறது. உதயா கைதி என்று தெரிந்துமே ஜான்விகா காதலிக்கிறார்.
அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் காதல் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. இவர்களை அடுத்து படத்தில் வரும் அஜ்மலும் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் யோகி பாபுவின் வசனங்கள், காமெடி எல்லாம் நன்றாக இருக்கிறது. பல இடங்களில் யோகிபாவின் காமெடி சிரிக்க வைத்திருப்பது படத்திற்கு பலம். படத்தை தெளிவாக எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர். ஆனால், அதை கொண்டு சென்ற இடத்தில் கொஞ்சம் தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும்,படத்தில் சில இடங்களில் அழுத்தமான காட்சிகள் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தினுடைய பின்னணி இசை ஒளிப்பதிவு எல்லாம் நன்றாக இருக்கிறது. இந்த படத்தின் மூலம் சமூகத்திற்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் இயக்குனர் மெனக்கட்டு கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் சுவாரசியத்தை காண்பித்து இருந்தால் படம் சிறப்பாக இருந்திருக்கும். மொத்தத்தில் ஒரு முறை சென்று பார்க்கும் படமாக இருக்கிறது.

நிறை:
நடிகர்கள் நடிப்பு
யோகி பாபுவின் காமெடி
கதைகளம் ஓகே
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
குறை:
இன்னும் கொஞ்சம் கதை களத்தில் சுவாரசியத்தை கொடுத்திருக்கலாம்
அழுத்தமான காட்சிகளை தெளிவாக காண்பித்திருக்கலாம்
சில லாஜிக் குறைபாடுகள்
மொத்தத்தில் அக்யூஸ்ட் படம் - முயற்சி






