மறைந்த நடிகர் சேதுராமனின் நினைவு தினத்தை ஒட்டி அவருடைய மனைவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் உருக்கமான பதிவு தான் தற்பொழுது நேரத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார்.

இவர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் சந்தானத்தின் மூலம் தான் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். மேலும், இவர் நடிகர் மட்டும் இல்லாமல் மருத்துவரும் ஆவார். டாக்டர் சேதுராமன், அண்ணா பல்கலைக்கழகத்தில் சரும நிபுணர் எனப்படும் dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். பின் கடந்த 2016ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனை ஒன்றை திறந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அண்ணா நகரில் தனது இரண்டாவது மருத்துவமனையையும் திறந்தார் சேதுராமன்.
சேதுராமன் இறப்பு:
மருத்துவர் மற்றும் நடிகர் என்று இரண்டு துறையில் சிறந்து வந்த டாக்டர் சேதுராமன் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் சேதுராமன் காலமானார். இவரின் இறப்பிற்கு பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். மேலும், சேதுராமன் இறந்த போது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார்.

சேதுராமன் குடும்பம்:
பின் உமாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. தன் கணவர் மீண்டும் வந்துவிட்டார் என்று உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார். சேதுராமன் இறப்பிற்கு பின் உமா தன் இரண்டு பிள்ளைகளை கவனித்து வருகிறார். சமீபத்தில் தான் இவர் தன்னுடைய 8ஆம் ஆண்டு திருமண நாளில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில், உங்களை நான் அறிந்து 8 வருடங்கள் ஆகிறது. நேரில் 4 வருடங்கள் மற்றும் நினைவில் 4 வருடங்கள். உங்களை நான் நினைவில் விரும்புகிறேன்.
திருமண நாள் பதிவு:
தற்போதும் மிஸ் செய்கிறேன். உங்கள் மற்றும் சஹானாவின் பெரும்பாலான படங்களை நான் எடுத்துள்ளேன். ஆனால், பிரசவத்திற்கு பின்னர் உடல் எடை அதிகரித்ததால் நான் புகைப்படம் எடுக்கவில்லை. உடல் எடையை குறைத்துவிட்டு புகைப்படங்கள் எடுக்கலாம் என்று காத்திருந்தேன். அந்த நாட்கள் திரும்ப கிடைக்காது. சஹானா மற்றும் வேதாந்துடன் அதிக நினைவுகளை உருவாக்குவார் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் நேற்றோடு சேதுராமன் இறந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.
View this post on Instagram
சேதுராமன் நினைவு தினம் பதிவு:
இது தொடர்பாக உமா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நீங்கள் எங்களை விட்டு பிரிந்து 1461 நாட்கள் கடந்து இருக்கிறது. நீங்கள் எங்களுடன் இல்லை என்றாலும் நம்முடைய குடும்பத்திற்கு பெரிய தூணாக என்றும் நீங்கள் இருக்கிறீர்கள். நாங்கள் உங்களைப் பற்றி நினைக்காத நாளே இல்லை. உங்களைப் பற்றி நாங்கள் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். உங்களைப் பற்றி நினைத்தாலே எங்கள் முகத்தில் புன்னகை படர்கிறது. ஏதோ ரூபத்தில் நீங்கள் எங்களுடன் இருந்து கொண்டு தான் இருக்கிறீர்கள் என்பதை வாழ்க்கை எங்களுக்கு உணர்த்துகிறது என்று பதிவிட்டு இருக்கிறார்.






