50 பேரை தன்னுடன் கண் தானம் செய்ய வைத்த பிரபல நடிகர் ! யார் அவர் ?

0
1036

மலையாள நடிகர்களில் இளம் நடிகர் உன்னி முகுந்தன். இவர் தனுஷ் நடித்த தமிழ் பாடமான சீடன் படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் ஆக்சன், காமெடி, காதல் என பல படங்களில் நடித்துவிட்டார் உன்னி முன்குந்தன்.
மேலும், துல்கர் சல்மானின் விக்ரமாதித்யன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் ஒரு நல்ல காரியம் செய்துள்ளார். இறந்த பிறகு தன்னுடைய கண்ணை தானம் செய்ய ‘கண்தானம்’ செத்துள்ளார் உன்னி முகுந்தன்.

அவர் மட்டுமில்லாது, அவருடன் பணிபுரியும் 50 பேரையும் சேர்த்து கண்தானம் செய்ய வைத்துள்ளார் உன்னி முகுந்தன். இதற்கு காரணம், சமீபத்தில் இவரது ரசிகர் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தைக்கு உன்னி முகுந்தன் என பெயர் வைத்துள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இதனை பார்த்து நெகிழ்ந்து போன உன்னி முகுந்தன், நமக்கு இவ்வளவு செய்யும் ரசிகர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என கண் தானம் செய்துள்ளேன் எனக் கூறினார் உன்னி முகுந்தன்.