தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ரஜினி நடித்த படம் கூலி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், அமீர்கான் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் அமீர்கான், உபேந்திரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் படத்தில் சரியாக பயன்படுத்தவில்லை. இரண்டு பேரையுமே வீணடித்திருக்கிறார்கள் என்றெல்லாம் விமர்சனங்கள் இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் உபேந்திரா கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உபேந்திரா பேட்டி:
அதாவது தற்போது சிவராஜ்குமார்- உபேந்திரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 45. இந்த படம் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் உபேந்திரா, கூலி படத்தில் நான் நடித்தது பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தது. உண்மையில் கூலி படத்தில் நடித்ததில் எனக்கு வருத்தமே கிடையாது. ஒரு பிரேமில் ஓரமாக நிற்க சொன்னாலும் நான் நடிக்க தயார்.

கூலி படம் பற்றி சொன்னது:
காரணம், நான் ரஜினி உடைய ரசிகர் கிடையாது. தீவிர பக்தன். ரஜினி குறித்து தினமும் வரும் வீடியோக்களை எல்லாம் நான் பார்ப்பேன். ஒருமுறை கிடையாது 50 முதல் 100 முறை கூட அதை நான் பார்ப்பேன். அவர் என்ன மாதிரியான ஒரு நடிகர், திறமைசாலி, அவருடைய தத்துவம் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 1.50 மணி நேரம் அவர் பேசியது ஒரு சினிமா மாதிரி இருந்தது. இதற்கு மேல் எதற்கு சினிமாவை பார்க்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு தோன்றியது. கூலி படத்தில் முதலில் சிறிய கதாபாத்திரமாக தான் இருந்தது. பின்னர் எனக்காக அதை பெரிதாக மாற்றினார் என்று கூறியிருக்கிறார்.

உபேந்திரா குறித்த தகவல்:
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் உபேந்திரா. இவர்
கன்னட சூப்பர் ஸ்டார் என்று பலரும் அழைக்கிறார்கள். இவர் 1989 காலகட்டத்தில் இருந்து தற்போது வரை படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. இவருக்கு சூப்பர் ஸ்டார், ரியல் ஸ்டார் என்று பல பெயர்கள் உண்டு.






