மொதல்ல இத்தனை படத்துல நாயகனா நடிச்சிட்டு அப்புறம் தான் காமெடியான நடிப்பேன் – வடிவேலு சொன்ன தகவல்.

0
2912
vadivelu
- Advertisement -

ஷங்கர் மற்றும் வடிவேலுவுக்கு இடையிலான பிரச்சனை தற்போது சுமுகமாக தீர்க்கப்பட்டு வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டுள்ளது. வடிவேலு சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார்கள். இந்த படத்தையும் ஷங்கர் தான் தயாரித்து வந்தார். இந்த படம் பிரச்சனை காரணமாக ஷங்கருக்கும் வடிவேலுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து படத்தில் தான் நடிக்கப்போவது இல்லை என்று வடிவேலு கூற, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-
Pei Mama is not Vadivelu's next movie - DGZ Media

இப்படி ஒரு நிலையில் ஷங்கர் மற்றும் வடிவேலுவுக்கு இடையிலான பிரச்னையில் தயாரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டு சுமுகமாக பிரச்சனையை தீர்த்துள்ளது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள வடிவேலு, நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டை நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு நல்ல நேரம் பொறந்தாச்சு. இது எனக்கு மறுபிறவி. லைகா நிறுவனம் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கவுள்ளேன். இந்த சந்தோஷத்தில் எனக்கு 20 வயது குறைந்துவிட்டது.

இதையும் பாருங்க : இந்த விஷயத்தில் என் மகள் அழுதா கூட கண்டுக்கவே மாட்டேன், ஏன்னா – ஆல்யா மானஸா சொன்ன சீக்ரெட்.

- Advertisement -

மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில் நான் வாய்ப்பு தேடும் போது ஏற்பட்ட உணர்வு போல் இருக்கிறது. என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள்.அவர்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தான்.

சுராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘நாய் சேகர்’ படத்தில் செப்டம்பர் மாதம் முதல் நடிக்கவுள்ளேன். அதனைத் தொடர்ந்து 2 படங்களில் நாயகனாக நடித்துவிட்டு, பின்னர் காமெடியனாகவும் நடிக்கவுள்ளேன். தமிழக முதல்வரைச் சந்தித்த பின்னர் எனக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது. மீண்டும் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement