சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். மேலும், சினிமாவை போலவே பல்வேறு சின்னத்திரை நடிகர் நடிகைகள் திருமணம் செய்துள்ளார்கள். சேத்தன் – தேவதர்ஷினி , ஸ்ரீகுமார் – ஷமிதா , , சஞ்சீவ் – ப்ரீத்தி, போஸ் வெங்கட், சோனியா என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடியும் ஒருவர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்த இவர்கள் இருவரும் பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் தன்னுடைய மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்கள் சஞ்சீவ் -ஆல்யா.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா, அடிக்கடி குழந்தை வளர்ப்பிற்கான டிப்ஸ்களை அடிக்கடி கொடுத்து வருகிறார். அதே போல அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒருவர், உங்கள் மகள் ஏதாவது கேட்டு அடம் பிடித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் சில டிப்ஸ் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த ஆல்யா மானசா, அய்லா, எப்போதும் அடம் பிடிப்பாள். ஆனால் நாங்கள் அதை ஊக்குவிக்க மாட்டோம். எதாவது வேண்டும் என்றால் அவள் அழுதால் கூட நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம். பாவமாகத் தான் இருக்கும் ஆனால், அவளுக்கு புரிய வேண்டும் என்று தான் இப்படி இருப்போம். அவர்கள் அடம் பிடிப்பதை பார்த்து நாம் சமாதானம் செய்தால் இந்த ஒட்டுமொத்த உலகமும் தனக்கு அடிபணியும் என்று அவள் நினைத்து விடுவார். குழந்தைகள் குணாதிசங்கள் பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது. நாம் அவர்களை ஒரு நல்ல மாணிக்கமாக உருவாக்க முடியும் என்று பதில் கூறியிருக்கிறார்.