சும்மா இருக்க முடியுமானு நான் வெறும் நடிப்பா தான் பண்ணேன். ஆனா இப்போ – வடிவேலுவின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ.

0
1144
vadivelu
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர்தான் வடிவேலுக்கு தலைவலி ஏற்பட்து . இந்த பட பிரச்சனையால் வடிவேலு பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க தடையை பெற்றுள்ளார். சமீபத்தில் கூட நண்பர்கள் கெட் டு கேதரில் வடிவேலு பேசிய வீடியோ ஒன்று வைரலானது. அதில், சிவாஜி கணேசன் நடித்த கர்ணனின் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற உன்னதமான தமிழ் பாடலை பாடினர்.

-விளம்பரம்-

அப்போது வடிவேலு சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற வரியை பாடும் போது தன்னை கை காண்பித்து கொண்டார் வடிவேலு. மேலும், இந்த பாடலை படைகொணடே இருக்கும் போதே கண்கள் கலங்கி சில நிமிடங்கள் பாடுவதையே நிறுத்தியிருக்கிறார். அவர் கலங்கியதைக் கண்டு, மற்றவர்களும் கலங்க, சுதாரித்துக் கொண்டு, ‘உங்களுக்கெல்லாம் ஒரு வருஷம்தான் லாக்டௌன்; நான் பத்து வருஷமாவே லாக்டௌன்லதானே இருக்கேன்’ என்று வேதனையுடன் கூறி இருந்தார்.

இதையும் பாருங்க ” :தடுப்பூசி போடாமல் போஸ் கொடுக்கிறார் என்று கேலி செய்த பலர் – புதிய புகைப்படத்தை வெளியிட்டு வாயை அடைத்த நயன்தாரா.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வடிவேலு வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர், உலகத்தையே ஆட்டி படைக்க இறைவன் கொரோனா என்ற பூச்சியை அனுப்பி இருக்கிறார். அதுக்கு பேர் கொரோனாவாம். நான் அரையானவா பாத்து இருக்கேன் ஓரணாவ பாத்திருக்கேன்இது என்ன கொரோனாவாம். யாரும் வெளியில் போக கூடாது யாரும் தொட்டு பேச கூடாதுனு ஆகிடிச்சி. இறைவன் கொரோனானானு ஒரு படத்த ரிலீஸ் பண்ணி அத வீட்டுக்குள்ளே உக்காந்து பாருடானு சொல்லி இருக்கார்.

This image has an empty alt attribute; its file name is 1-145-1024x1000.jpg

அந்த படத்த் எப்ப தூக்குவான்னு தெரியல. நான் ஒரு படத்துல நடிச்சிருப்பேன் ‘சும்மா இருங்கறது எவ்ளோ கஷ்டம்’ னு சொல்லி இருப்பேன். அத வெறும் படமாக தான் பண்ணேன். ஆனால், உண்மையிலேயே அனைவரும் சும்மா இருந்தா எப்படி இருக்கும் என்று உணர வைக்கிறான் இறைவன் என்று கூறியுள்ளார் வடிவேலு. அதே போல அரசு சொல்லும் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடியுங்கள் என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement