சிம்பிளாக முடிந்த மகளின் திருமணம்..!நடிகர்களை அழைக்காத பிரபலங்களை அழைக்காதா வடிவேலு..!

0
1505
Vadivelu
- Advertisement -

தமிழ் சினிமாவின் வைகை புயல் என்றழைக்கபட்ட நடிகர் வடிவேலுவின் இளைய மகளின் திருமணம், மிகவும் எளிமையான முறையில் ஆரவாரமின்றி மதுரையில் நேற்று (அக்டோபர் 19) மிக எளிமையாக நடைபெற்றது.

-விளம்பரம்-

vadiveludaughter

- Advertisement -

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் வடிவேலு. வடிவேலு, சினிமாவில் புகழின் உச்சத்துக்குச் சென்ற வேளையில், அரசியலில் தலையிட்டு சறுக்கல்களைச் சந்தித்தார்.

இந்நிலையில், வடிவேலுவின் சொந்த ஊரான மதுரையில், எந்தவித ஆடம்பர ஏற்பாடுகளும் விளம்பரமும் இன்றி, வடிவேலு தன் மகளுக்குத் திருமணம் நடத்தியுள்ளார்.வடிவேலுவின் மூத்த மகன் சுப்பிரமணியனுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

-விளம்பரம்-

vadiveludaughter

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த இந்தத் திருமணத்துக்கு திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பிரமாண்ட ஏற்பாடுகள் இல்லாமல் அமைதியாக நடந்தது. அதேபோன்று, தன் மகளின் திருமணத்தையும் எளிமையாக நடத்தி முடித்திருக்கிறார் வடிவேலு.

இந்தத் திருமணம் குறித்து அந்தப் பகுதியில் எந்தப் பேனரும் வைக்கப்படவில்லை. அரசியல், திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. புகைப்படங்களைப் பார்த்துவிட்டு திருமண மண்டபத்துக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ‘திருமணம் எளிமையான முறையில் நடக்கிறது, தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று கூறி அனுப்பிவிட்டனராம்!

Advertisement