உடம்புல தெம்பு இருக்கு, ஆனா ஒருத்தரும் கூப்பிடலையே. நடிக்க ஆசை இருக்கு – ‘நண்பேன்டா’ வாட்ஸ்அப் குழு சந்திப்பில் கண் கலங்கியுள்ள வடிவேலு.

0
1472
vadi
- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற நண்பர்கள் சந்திப்பில் நடிக்காமல் இருப்பது குறித்து நடிகர் வடிவேலு மனமுருகி பேசி இருக்கிறார். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர்தான் வடிவேலுக்கு தலைவலி ஏற்பட்து . வடிவேலு சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார்கள். இந்த படத்தையும் ஷங்கர் தான் தயாரித்து வந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் பிரச்சனை காரணமாக ஷங்கருக்கும் வடிவேலுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூட சொல்லலாம், மேலும் இந்த படம் அப்படியே முடங்கி விட்டது. இதையடுத்து படத்தில் தான் நடிக்கப்போவது இல்லை என்று வடிவேலு கூற, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது. மேலும், அவரை யாரும் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டது. இருப்பினும் வடிவேலு தற்போதும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வரும் ஒரு நபராக தான் இருந்து வருகிறார்.

இதையும் பாருங்க : உன் ‘சுச்சி லீக்ஸ்’ வீடியோ வேண்டும் – ஆபாச மெசேஜ் செய்த நபரின் குடும்ப புகைப்படத்தை போட்டு வெளுத்து வாங்கிய சின்மயி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடிவேலு பல்வேறு சினிமா பிரபலங்களுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தமிழகக் காவல்துறையின் உயரதிகாரிகள் சிலர் உறுப்பினர்களாக இருக்கும் ‘நண்பேன்டா’ வாட்ஸ்அப் குழு ஒன்றின் சார்பாக நடந்த நிகழ்ச்சி தான் அது. இந்த சந்திப்பில் வடிவேலுவின் வருகை தான் ஹைலைட். கொஞ்சம் மெலிந்து காணப்பட்ட வடிவேலு நண்பர்கள் மத்தியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். பிரபல பாடகர் முகேஷுடன் வடிவேலு பாடுகிறார் .

சிவாஜி கணேசன் நடித்த கர்ணனின் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற உன்னதமான தமிழ் பாடலை இவர்கள் இருவரும் இணைந்து பாடினர். அப்போது வடிவேலு சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற வரியை பாடும் போது தன்னை கை காண்பித்து கொண்டார் வடிவேலு. மேலும், இந்த பாடலை படைகொணடே இருக்கும் போதே கண்கள் கலங்கி சில நிமிடங்கள் பாடுவதையே நிறுத்தியிருக்கிறார். அவர் கலங்கியதைக் கண்டு, மற்றவர்களும் கலங்க, சுதாரித்துக் கொண்டு, ‘உங்களுக்கெல்லாம் ஒரு வருஷம்தான் லாக்டௌன்; நான் பத்து வருஷமாவே லாக்டௌன்லதானே இருக்கேன்’ 

-விளம்பரம்-

“நான் என்ன தப்பு செஞ்சேன்? மக்கள் என் பேச்சை ரசிக்கிறாங்கனு கூப்பிட்டாங்க, போனேன். அதன்பிறகு அந்தப் பக்கம் இந்தப் பக்கம்னு ரெண்டு தரப்புலயுமே என்னை ஒதுக்கிட்டாங்க. உடம்புல தெம்பு இருக்கு, ஆனா ஒருத்தரும் கூப்பிடலையே. நடிக்க ஆசை இருக்கு, உடல்ல தெம்பும் இருக்கு. ஆனா ஒருத்தரும் கூப்பிடாம வீட்டுல அடைஞ்சு கிடக்கிறது எவ்வளவு பெரிய ரணமா இருக்கு தெரியுமா என்று மற்றவர்களிடம் மனம் நொந்து பேசினார் என்று ‘நண்பேன்டா’ வாட்ஸ்அப் குழுவை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement