எனக்கு பயம்.! அஜித் சார் கூடலா நான் போக மாட்டேன்.! நடிகர் வைபவ்.!

0
621
Vaibav
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜீத் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தினை சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய வினோத் குமார் இயக்கி வருகிறார். மேலும் ,இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் இவர்கள் வெங்கட்பிரபு அஜித்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மங்காத்தா விரைவில் உருவாகப் போகிறது என்ற ஒரு செய்தியும் பரவலாக பேசப்பட்டு வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் மங்காத்தா முதல் பாகத்தில் நடித்த வைபவ் போட்டி ஒன்றில் பங்கேற்ற போது மங்காத்தா 2 குறித்து பேசியுள்ளார். 2011ம் ஆண்டு வெளியான ‘மங்காத்தா’ படத்தில் நடிகர் வைபவ் அஜித்துடன் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியில் நடித்திருப்பார். அதனை இன்றுவரை நினைத்து பயந்து வருகிறாராம் வைபவம்.

அந்த பேட்டியில் பங்கேற்ற வைபவிடம் மீண்டும் அஜித்துடன் பைக் ஸ்டண்ட் காட்சியில் நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கண்டிப்பாக நான் நடிக்க மாட்டேன். ஏனெனில் நான் முதல் முறை நடித்தபோது அவ்வளவு பயந்துவிட்டேன். நான் பைக்கில் 220 வேகத்தில் எல்லாம் சென்றது இல்லை. ஆனால், அவரோ 240 வேகத்தில் சென்றார். ஒருவேளை மீண்டும் அவருடன் பைக் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது போல வந்தால் அவரைப் நடிக்க விட்டு நான் கிரீன் மேட்டில் எனது காட்சிகளை எடுத்து முடித்து விடுவேன் என்று கூறியுள்ளார் வைபவ்.

-விளம்பரம்-
Advertisement