நடிகர் வைபய்வின் குடும்ப புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் வைபவ் ரெட்டி, தமிழில் சினிமாவில் “சரோஜா, மங்காத்தா” போன்ற படங்களில் நடித்து தமிழ் நாட்டின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர். இவர், தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஏ. கோதண்டராமி ரெட்டியின் மகன் என்பது குறிப்பிட்டத்தக்கது. இவரின் மகனான வைபவ் ரெட்டி 2007 ஆம் ஆண்டு வெளியான ‘கோதவா’ எனும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து ரஜினி, அஜித், சுந்தர் சி என தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் வைபவ் ரெட்டி சமீபத்தில் வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவாகினர். இவரை தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகம் செய்தது இயக்குனர் வெங்கட் பிரபு தான். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான “சரோஜா” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வைபவ்.
அதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கிய “மங்காத்தா, சென்னை 28-2,” போன்ற படங்களிலும் நடித்துள்ளார் வைபவ். இதனை தொடந்து காட்டேரி, பயூன், ஆர் கே நகர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான பயூன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துக்களை பெற்றிருந்தது. இப்படத்தில் நட்பே துணை திறபபட கதாநாயகி நடித்திருந்தார்.
மேலும் ஜோஜி ஜார்ஜ், அந்தக்குடி இளையராஜா, ஆடுகளம் நரேன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்திற்கு பிறகு அடுத்த ஆண்டு மற்றும் அதற்கடுத்தாண்டு ஆலம்பனா மற்றும் ஜிந்தா என திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.வைபவ் கடந்த 2011 ஆம் ஆண்டு சாத்வி ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருந்தது.
இந்நிலையில் தான் வைபவ் ரெட்டி மற்றும் அவரின் குழந்தைகளின் அழகிய புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இவரின் குழந்தைகள் வளர்ந்து தற்போது அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுறுகின்றனர். வைபவ் ரெட்டியின் மனைவியான சாத்வி ரெட்டி நடிகையும், தொகுப்பாளனியுமான ரம்யா மற்றும் அட்லீ மனைவி ப்ரியாவின் தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது.