நடிகர் வையாபுரி மகளா இது…! அவங்களுக்கு இப்படியொரு திறமையா ! புகைப்படம் உள்ளே !

0
1554
Actor vaiyapuri family

பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, கணவரின் அன்பும் அக்கறையும் அதிகமாகி இருக்கு. நானும் குழந்தைகளும் ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கோம்” – உற்சாகமாகப் பேசுகிறார், நடிகர் வையாபுரியின் மனைவி, ஆனந்தி. கணவரின் அரசியல் நிலைப்பாடு, மகளின் ஓவியம் மற்றும் நடனத் திறமைகளைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.

vaiyapuri

“என் பொண்ணு ஷிவானி, எட்டாவது முடிக்கப்போகிறாள். எல்.கே.ஜி படிக்கும்போதிலிருந்தே டிராயிங்ல அதிக ஆர்வம். டிராயிங் க்ளாஸூக்கு அனுப்பினோம். அவளின் திறமையைப் பார்த்த நடிகரும் ஓவியருமான பாண்டு சார், உத்வேகம் கொடுத்தார். அப்புறம், கே.கே.நகரில் இருக்கும் ‘அன்னை காமாட்சி கலைக்கூடத்தில்’ வெங்கடாசலம் மாஸ்டர்கிட்ட க்ளாஸூக்கு அனுப்பினோம். தஞ்சாவூர் பெயின்டிங் சிறப்பாகச் செய்வாள். பொதுவா, பெயின்டிங்ல டிப்ளமோ கோர்ஸ் பண்றதுக்கு 10 மாசம் பயிற்சி எடுக்கணும். என் பொண்ணு, மூணே மாசத்தில் முடிக்கப்போகிறாள்.

படிப்பு பாதிக்கப்படக்கூடாதுனு வாரத்தில் சில மணி நேரமே பயிற்சி வகுப்புக்குப் போகிறாள். ஃப்ரீ டைமில் டான்ஸ் பிராக்டீஸும் செய்வாள். அவள் இன்ஸ்டிட்யூட்டில் வருடம்தோறும் பெயின்டிங் கண்காட்சி வைப்பாங்க. அதில், பலரும் தங்கள் ஓவியத்தை காட்சிப்படுத்துவாங்க. அதில் என் பொண்ணு ஓர் இயற்கை காட்சி பெயின்டிங்கை வெச்சிருந்தாள்.

Actor-vaiyapuri

vaiyapuri-actor

shivani

அதைப் பலரும் பாராட்டினாங்க. கணவருக்கு நெருங்கிய சினிமா பிரபலங்களைக் கண்காட்சிக்கு கூப்பிட்டிருந்தோம். நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் கலந்துகிட்டாங்க. இப்போ, பி.எஃப்.ஏ ( பேச்சுலர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் ) கோர்ஸ் படிக்க ஆசைப்படறாள். அது நிச்சயம் நடக்கும். பரதநாட்டியத்தில் அரங்கேற்றமும் செய்திருக்கிறாள்” என மகளின் பெருமைகளைப் பூரிப்புடன் சொல்லிக்கொண்டே சென்றார் ஆனந்தி.