பிக்பாஸ் வீட்டில் இருந்து தன் வீட்டுக்கு சென்று வையாபுரி கூறிய முதல் வார்த்தை இதுதான்.

0
9446
Vaiyapuri

விஜய் டீவியில் கமல் தொகுத்து வழங்கிவரும் “பிக் பாஸ்” நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் இந்த வாரம் வையாபுரி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
vaiyapuriஎந்தவித முன்னறிவிப்புமின்றி சனிக்கிழமை இரவு சர்ப்ரைஸாக வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின்னர் என்ன நடந்தது என்று அவரது மனைவியே நம்மிடம் பகிர்ந்துகொள்கின்றார்வாருங்கள் அது என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

வையாபுரியின் மனைவி ஆனந்தி நம்மிடம் “பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் என்று கூறும் அளவிற்கு எங்களது வாழ்க்கை பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது”சனிக்கிழமை இரவு எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீரென வந்து நின்ற அவரைப் பார்த்து ரொம்பவே அழுதுவிட்டேன். அதற்கு அவர் ” எதற்கு அழுற எல்லாம் நல்ல படியா முடிந்தது.புது வையாபுரியா வந்துருக்கேன் இப்ப“ என்று எங்களை சமாதானம் செய்தார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த வருத்தத்தில் அன்று இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்.இனிமேல் உங்கள் மேல் அன்பாக நடந்து கொள்வேன் என்ற அவர், எனது மகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்று வந்தார்.
 Vaiyapuri
பிக்பாஸ் வீட்டில் விதவிதமான சாப்பாடு சமைத்தாக கூறினார். எங்களுக்கும் சமைத்து தருவதாகவும் கேட்டார். நான் தான் வேணாம் என்று கூறிவிட்டேன்.தற்போது மெலிந்து காணப்படுவதால் அவருக்கு பிடித்த சாப்பாடு சமைத்து போட வேண்டும் என்றும் நவராத்திரி பண்டிகையை அவருடன் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆண்கள் கழிவறைக்குள் காஜல் எடுத்த புகைப்படம்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியால் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு விமர்சனத்தில் சிக்கியவர்கள் ஜீலி,காயத்ரி,ட்ரிக்கர் சக்தி,ஆர்த்தி ஆகியோர்.
Vaiyapuriஅவர்களுக்கு மத்தியில் வையாபுரி பிக்பாஸில் கலந்து கொண்டதினால் பிக்பாஸ் வீட்டிலும் சரி,வெளியிலும் சரி நல்லபெயரோடும் மகிழ்ச்சியோடும் வெளிவந்திருக்கின்றார் எனலாம்.