இவரது மனைவி பாத்திமா டீவி தொலைக்காட்சி ஒன்றில் தொகுபலினியாக பணியாற்றி வந்தார் பின்னர் விஜய் ஆண்டனியை பேட்டி எடுக்க சென்ற போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.அதன் பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இவர் விஜய் ஆண்டனி நடித்த பல படங்களை தயாரித்துள்ளார்.
இதுவரை 7 தமிழ் படங்களையும் 3 தெலுகு படங்களையும் தயாரித்துள்ளார் பாத்திமா. விஜய் ஆண்டனியின் அனைத்து படங்களையும் தயாரித்தது பாத்திமா தான்.விஜய் ஆன்டனி எப்போதும் தனது இந்த வெற்றிக்கு காரணம் தனது மனைவிதான் என்று எப்போதும் கூறிவருவார்.
விஜய் ஆண்டனியை ஒரு பெரிய நடிகராக வரவழைக்க வேண்டும் என்பது பாத்திமாவின் ஆசை. அதற்கு ஏற்றார் போல அவர் கதைகள் தேர்வு செய்து கொடுப்பாராம்.




