நிகழ்ச்சிகளுக்கு நடிகர் விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் செல்வதற்கான காரணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டார்.
இவருக்கு வெறும் 16 வயது தான். இவர் சென்னையில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து இருந்தார். திடீரென்று இவர் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மீராவின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறியிருந்தார்கள். மகளின் இறப்பினால் விஜய் ஆண்டனி மற்றும் அவரின் மனைவி பாத்திமா மனம் உடைந்து போய் விட்டார்கள். தற்போது அதிலிருந்து விஜய் ஆண்டனி மீண்டு தன்னுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிருக்கிறார்.
செருப்பு அணியாத காரணம்:
அதோடு இவர் தன் மகளின் இறப்பிற்கு பின் பொது நிகழ்ச்சிகளில் காலணி அணியாமலேயே சென்று இருக்கிறார். இதற்கு பலரும், ஏன்? எதற்கு? என்று கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக விஜய் ஆண்டனி, நான் என்றைக்கு கால்களில் செருப்பு இல்லாமல் பயணிக்க ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து எனக்கு எந்தவிதமான நெருக்கடியான சூழலும் வரவில்லை. என்னுடைய வாழ்நாள் முழுவதும் இப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
விஜய் ஆண்டனி பற்றிய தகவல்:
அதனால் தான் நான் காலணிகளை அணியவில்லை. இது எனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சந்தோஷத்தை தருகிறது என்று கூறியிருக்கிறார். இவர் முதலில் தமிழ் சினிமாவில் சுக்ரன் படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின் இவர் 19 ஆண்டுகளாக இசை அமைப்பாளராக இருக்கிறார். அதனை அடுத்து 2012-ஆம் ஆண்டு வெளிவந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார். அப்படியே இவர் 12 ஆண்டுகளுக்கு மேலாக பல படங்களில் நடித்து இருக்கிறார்.
விஜய் ஆண்டனி குடும்பம்:
இதனிடையே கடந்த 2006ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை விஜய் ஆண்டனி திருமணம் செய்து கொண்டார். இவர் ஹீரோவாக நடித்த நான் என்ற படத்தை தயாரித்தது அவரது மனைவி பாத்திமா தான். இவரது மனைவி பாத்திமா டீவி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். பின்னர் விஜய் ஆண்டனியை பேட்டி எடுக்க சென்ற போது இருவருக்கும் காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
விஜய் ஆண்டனி நடித்த படங்கள்:
கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த படம் ரோமியோ. இந்த படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மிர்னாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, தலைவாசல் விஜய் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.