சர்வதேச அளவில் விஜய் தான் டாப்..! ஹாலிவுட் நடிகர்களை பின்னுக்குத்தள்ளிய தளபதி

0
611
vijay

விஜய்யின் புகழ் “மெர்சல்” படத்திற்கு பிறகு அதிகரித்து கொண்டே இருந்தது. இந்த படத்திற்கு நடிகர் விஜய்க்கு 30 கோடி ருபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், மெர்சல் படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்து வரும் பல்வேறு அங்கீகாரத்தாலும், விருதுகளாலும் நடிகர் விஜய்யின் புகழ் சர்வதேச அரங்கிலும் கொடி கட்டி பறந்து வருகிறது.

- Advertisement -

சர்வேதச அளவில் ஆண்டுதோருக்கும் IARA என்ற விருது வழங்கும் விழா நடைபெற்று வந்தது. இந்த விழாவில் சர்வேதேச அளவில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பெற்றது. அதில் இந்த ஆண்டு உலகளவில் சிறந்த நடிகர்கள் பட்டியலில்’மெர்சல்’ படத்தில் நடித்ததற்காக விஜய்யின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இந்த பட்டியலில் சர்வேதேச அளவில் 8 நடிகர்கள் இடம்பெற்றிருந்தனர், அதில் இந்திய நடிகர்களில் இடம் பெற்றுள்ளது நடிகர் விஜய் மட்டும் தான். இந்நிலையில் விஜய், கென்னத் ஓகோலி, டைம் ஹசன், ஜோஷுவா ஜேக்‌ஷன் ஆகியோரின் பெயர்கள் இறுதி பட்டியலில் இடம்பெற்ற நிலையில்2018ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் விஜய்க்கு கிடைத்த இந்த சர்வேதேச அங்கீகாரத்தையொட்டி அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திகைத்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் விஜய் குறிப்பிட்டு பல hash tag கள் தற்போது ட்ரெண்டிங் ஆகிவருகிறது.

Advertisement