என்னது இது விஜய்யா ? தளபதி நடித்த முதல் படம் எது தெரியுமா ?வீடியோ உள்ளே !

0
1408

தற்போது நாம் திரையில் பார்த்து ரசிக்கும் நடிகர்களின் பழைய படங்களை பார்த்தாலே இவரா இப்படி இருந்திருக்கிறார் என்று ஆச்சர்யப்படுவோம்.ஆனால் விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்கள் என்றால் நம்ப முடியுமா??

தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை பிடித்து ஒரு மிக பெரிய ரசிகர் பட்டால்த்தை பிடித்திருக்கும் விஜய் சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.தனது அப்பா சந்திரசேகர் இயக்கத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் 1984 இல் விஜயகாந்தை வைத்து வெற்றி என்ற படத்தை இயக்கினார்.அப்போது 10 வயதான தனது மகன் விஜயை சினிமாவில் அறிமுகபடுத்தினர்.அதன் பின்னர் அவர் இயக்கிய பெரும்பாலான படங்களில் விஜயை ஏதாவது ஒரு குழந்தை கடாபத்திரத்தில் நடிக்க வைத்தார்.வெற்றி, வசந்த வாசல்,நீதியின் மறுபக்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் சந்திரசேகர் இயக்கத்தில் விஜயாகாந்த் நடித்த பெரும்பாலான படங்களில் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.