நடிகர்களில் விஜய் தான் அதிகம்.! கேரள மக்களுக்கு வித்யாசமாக நிதியுதவி செய்த விஜய்

0
416

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வரும் நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் 70 லட்ச ரூபாய் நிதியுதவியை செய்துள்ளார்.

Kerala

இதற்காக கேரளாவில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள தனது ரசிகர் மன்றத்திற்கும் தலா 3 லட்ச ரூபாய் என்று மொத்தம் 70 லட்ச ரூபாயை அனுப்பிவைத்துள்ளார். மேலும், அந்த பணத்தை வைத்து அந்தந்த மாநிலத்தில் உள்ள மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் நடிகர் விஜய். மேலும், அரசாங்கத்திடம் நிதியை கொடுத்து அது மக்களிடம் வந்து சேர பல நாள் ஆகும் என்பதால் அதை நாமே நேரடியா மக்களிடம் கொண்டு செல்வோம் என்று நினைத்து விஜய் அவர்கள் தெளிவான முடிவு எடுத்திருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிரிழந்த நபர்களின் குடும்பத்தாருக்கு நேரில் சென்று பண உதவியை அளித்தார் நடிகர் விஜய். இந்நிலையில் நமது அண்டை மாநிலமான கேரள மக்களுக்கும் உதவி செய்துள்ளது ரசிகர்களிடையே பாராட்டகூடிய விடயமாக அமைந்துள்ளது. தமிழ் நடிகர்களிலே பாதிக்கபட்ட கேரள மக்களுக்கு அதிக நிதியுதவியை கொடுத்துள்ளது விஜய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay-actor

இதற்கு முன்னதாக நடிகர் விக்ரம் 35 லட்ச ரூபாய்க்கான காசோலையை கேரள முதலமைச்சர் நிவாரண நித்திக்கு அனுப்பி வைத்திருந்தார். அதே போல கேப்டன் விஜயகாந்தும் தனது கட்சி சார்பாக 1 கோடி ரூபாய்க்கான நிவாரண பொருட்களை வழங்கவுள்ளதாக அறிப்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.எது எப்படியோ கேரள மக்களுக்காக தமிழ் திரையுலகில் இருந்து பல்வேறு உதவிகள் குவிந்து வருவது தமிழ் நாட்டிற்கு கிடைத்த ஒரு பெருமை தான்.