விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் வேலை கேட்டு விஜயா ஒரு இடத்திற்கு சென்று இருந்தார். ஆனால், அங்கு வகுப்பு இலவசமாக தான் சொல்லித் தர வேண்டும் என்று அறியாமல் விஜயா இலட்சக்கணக்கில் சம்பளம் கேட்டார். அப்போது அந்த இடத்திற்கு அசோசியேஷன் மெம்பராக மீனா வந்தார். அவரை பார்த்தவுடன் விஜயா பயங்கரமாக கோபப்பட்டார். இலவசமாக நடனம் சொல்லித் தரும் விஷயத்தை மீனா சொன்னவுடன் விஜயா சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின் ஸ்ருதி-ரவி இருவரும் ஓட்டலில் நன்றாக வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்கள். அதை கெடுப்பதற்கும் ரவியை தன்னுடன் தன்னுடன் அழைத்து செல்வதற்கும் நீத்து திட்டம் போட்டார்.

முத்து கஷ்டப்பட்டு வண்டிகளை எல்லாம் ரெடி பண்ணி விட்டார். இதனால் அந்த ஓனரின் மூலம் 38 லட்சம் ரூபாய் பணம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து விட்டார். இன்னொரு பக்கம் சிந்தாமணி முத்துவிற்கு அந்த வீட்டை கிடைக்க விடாமல் பண்ணுவேன் என்று ரோகினியிடம் சொன்னார். அதற்குப்பின் மீனா, தன்னிடம் இருக்கும் பணத்தை திருடர்கள் திருடுவது போல கனவு காண்கிறார். முத்து, மீனாவிற்கு தைரியம் சொல்லி தூங்க வைத்தார். அதற்குப்பின் சிந்தாமணி சீக்கிரமாக முத்துவின் வீட்டை ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
மீனா வரும் வழியில் சிந்தாமணி ஆட்கள் பணத்தை திருடுவதற்கு திருடினார்கள். ஆனால், உண்மையில் பணம் இல்லை. முத்து சொன்னது போல் மீனா நடந்தார். அதற்குப்பின் பணத்தை வாங்குவதற்காக முத்து பைனான்சியர் வீட்டுக்கு சென்றிருந்தார். ஆனால், அவர் பணம் எடுத்து வருபவர் பிரச்சனையில் மாட்டிக் கொண்டார் என்றார். பின் முத்து, டாக்குமெண்டில் எல்லாம் கையெழுத்து போட்டுவிட்டு அந்த பணம் வைத்திருப்பவர் இடத்தை சொல்லுங்கள். நானே நேரில் சென்று வாங்கிக் கொள்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் ஏலத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். 52 லட்சம் வரை சிந்தாமணி வீட்டை கேட்டிருந்தார். யாருமே கேட்காததால் ஏலத்தில் விடப் போனார்கள். மீனா அதிர்ச்சியில் இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சிந்தாமணி, முத்து வீட்டை எப்படியாவது அடைய வேண்டும் என்று பல குறுக்கு வழிகளை எல்லாம் செய்கிறார். இருந்தாலும் முத்து-மீனா இருவரும் அதை முறியடித்து விடுகிறார்கள். கடைசியாக பணத்தைக் கட்டி வீட்டை முத்து-மீனா இருவரும் மீட்டு விடுகிறார்கள். வக்கிலுமே வீட்டை மீட்டு முத்துவிடம் கொடுத்து விடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து அண்ணாமலைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சிந்தாமணி கோபத்தில் அங்கிருந்து கிளம்புகிறார். மீண்டும் அண்ணாமலையின் குடும்பம் வீட்டிற்கு வருகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
தன்னுடைய வீட்டை பார்த்தவுடன் விஜயா எமோஷனலாக அழுகிறார். பல போராட்டங்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்ததால் வீட்டில் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார் முத்து. தங்களுக்கு தெரிந்த உறவினர்கள் நண்பர்கள் எல்லோரையுமே அழைத்து இருக்கிறார்கள். எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து மனோஜ்க்கு கோபம் தான் வருகிறது. பார்வதி, மூத்த மகனால் தான் இந்த வீடு போக இருந்தது. ஆனால், முத்து இந்த வீட்டை உனக்காக மீட்டு கொடுத்து விட்டான். முத்துவிற்கு உன் மேல் ரொம்பவே பாசம் என்று சொல்கிறார். அதை கேட்டு விஜயா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்






