நடிகர் விஜய் போலீசில் புகார் – அதுவும் யார் மேலன்னு பாருங்க.

0
586
Vijay

இளைய தளபதி விஜய் சமீப காலமாகமே பல்வேறு சிக்கல்களில் சிக்கி வருகிறார். மாஸ்டர் படப்பிடிப்பில் நடைபெற்ற வருமான வரி துறை சோதனை துவங்கி, அவரது அப்பாவின் அரசியல் அறிவிப்பு வரை கடந்த ஆண்டு பல சிக்கல்களை சந்தித்தார் விஜய். இப்படி ஒரு நிலையில் விஜய் சார்பாக அவரது வழக்கறிஞ்சர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் விஜய்க்கு சென்னை சாலிகிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று சொந்தமாக இருக்கிறது நீலாங்கரை வீட்டில் வசித்து வரும் விஜய் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பயன்படுத்துவது கிடையாது. இதனால் அந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்த குடியிருப்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ரவிராஜா என்பவரும் மற்றும் துணைச் செயலாளராக பணியாற்றி வந்த குமார் ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக வாடகைக்கு இருந்து வந்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணங்களால் ரவி ராஜா மற்றும் குமார் ஆகிய இருவரும் அவர்கள் வகித்து வந்த பொறுப்பில் இருந்து நீக்கியதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்திருந்தது.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கத்தில் பதவி பறிபோனதால் இந்த இருவரையும் வீட்டை காலி செய்யும்படி நடிகர் விஜய் தரப்பில் கூறியுள்ளனர். னால், அவர்கள் இருவரும் வீட்டை காலி செய்யாமல் இருந்துவந்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் சார்பாக அவரின் வக்கீல்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்கள். அதில் விஜய்யின் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வரும் இரண்டு பேரையும் காலி செய்து தரும்படி நடிகர் விஜய் சார்பில் கூறியிருக்கிறார்கள்.

இதையடுத்து வீட்டை காலி செய்ய கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று ரவி ராஜா மற்றும் குமார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுபற்றி விருகம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள். இதுஒருபுரம் இருக்க மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement