ஒவ்வொரு ரசிகரின் வங்கி கணக்கிலும் பணம் செலுத்தியுள்ள விஜய். எவ்வளவு தெரியுமா?

0
35532
Vijay

ஒட்டுமொத்த உலகமும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்து போய் உள்ளது. இந்த நிலைமையை சரிசெய்ய உலகமே போராடி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் பரவல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனாவினால் 23077 பேர் பாதிக்கப்பட்டும், 718 பேர் பலியாகியும் உள்ளனர். உயிரை கொன்று வரும் இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து உள்ளார்.

பொது இடங்கள், கடைகள், பல்வேறு வணிக வளாகங்கள் எல்லாம் மூடப்பட்டு உள்ளது. மேலும், ஊரடங்கினால் வருமானம் இல்லாமல் ஏழை மக்கள், தினந்தோறும் கூலி வேலையும் செய்யும் மக்கள் என பல பேர் தவித்து வருகின்றனர். அதே போல சினிமா துறையிலும் பலர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை என பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

- Advertisement -

மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு நிதியுதவி செய்ய விரும்புவோர் தாராளமாக தரலாம் என அறிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும், சினிமா தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. சினிமா தொழிலாளர்கள் சங்கத்தில் மொத்தம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு ரூ.3.75 கோடி தேவைப்படுகிறது என்பதால் நடிகர், நடிகைகள் அனைவரும் நிதி வழங்க வேண்டும் என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இதனை அறிந்த பல நடிகர்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். இதுவரை பெப்சி அமைப்புக்கு ரூ.2 கோடியே 45 லட்சம் நிதி வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.நடிகர்களை பொறுத்த வரை சிவகார்த்திகேயன்-விஜயசேதுபதி சூர்யா ஆகியோர் தலா 10 லட்சமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 லட்சமும், அஜித் 1.25 கோடியும் அளித்திருந்தனர். மேலும் ராகவா லாரன்ஸ் அதிகபட்சமாக 3 கோடி ரூபாயை அளித்திருந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் நடிகர் விஜய் பிரதமர் நிவாரண நிதிக்கு ₹ 25 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ₹ 50 லட்சம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்திற்கு ₹ 25 லட்சம், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ₹ 10 லட்சம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தலா ₹ 5 லட்சம் வழங்கினார். இந்த நிலையில் தமிழக அரசிற்கு வழங்கிய நிவாரணநிதி அல்லாமல் ஊரடங்கு கால் பாதிக்கப்பட்டுள்ள ரசிகர்களின் கணக்குகளிலும் நடிகர் விஜய் தனித்தனியாக பணம் செலுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் வங்கிக்கணக்கில் தலா 5 ஆயிரம் ரூபாய் நடிகர் விஜய் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர்கள் தங்களது சொந்தப் பணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி மற்றும் பிற உதவிகள் வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement