மாறுவேடத்தில் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்த விஜய்..! எந்த படம்…எந்த தியேட்டரில் தெரியுமா?

0
590

நடிகர் நடிகைகளை பொறுத்த வரை அவர்களது திரைப்படங்கள் வெளியானால் திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகரகோலோடு படம் பார்த்து வழக்கம். இதற்கு முக்கிய காரணமே ரசிகர்களிடம் படம் எந்த அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது என்பதற்காகத்தான்.

vijay-at-sathyam-theater

திரையரங்கிற்கு சென்று ரசிகர்களோடது ரசிகர்களாக அமர்ந்து திரைப்படத்தை பார்ப்பது என்பது அறிமுக நடிகர் நடிகைகளுக்கு வேண்டுமானால் சாத்தியபடலாம். ஆனால், நடிகர் விஜய் போன்று முன்னணி நடிகர்கள் திரையரங்கிற்கு சென்று திரைப்படம் பார்ப்பதென்பது மிகவும் அரிது தான்.

திரையரங்கிற்கு விஜய் சென்றால் அங்கு கண்டிப்பாக ரசிகர்களின் கூட்டம் அலை மோதும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நடிகர் விஜய், அவரது படங்களை மாறுவேடத்தில் திரையரங்கிற்கு சென்று பார்த்துள்ளார். இதுகுறித்து சென்னையில் உள்ள பிரபல காசி திரையரங்க உரிமையாளர் கூறுகையில், விஜய் மாறுவேடத்தில் அடிக்கடி திரையரங்கிற்க்கு வந்து படத்தை கண்டுள்ளார். இதுவரை அவருடைய “மெர்சல், கத்தி, துப்பாக்கி போன்ற படங்களுக்கு ரகசியமாக விஜய் வந்து ரசிகர்களோடு அமர்ந்து பார்த்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

kasi

நடிகர் விஜய்யுடன் அமர்ந்து திரையரங்கில் படம் பார்ப்பது என்பதெல்லாம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மிக பெரிய கனவு போன்றது தான். ஆனால், நடிகர் விஜய் ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்த்துள்ளார் என்ற செய்தி கேட்டதும் காசி திரையரங்கில் இதுவரை விஜய் நடித்த படங்களை பார்த்த ரசிகர்கள் , ஒருவேளை விஜய் தங்குளுடன் அமர்ந்து படம் பார்த்து இருப்பாரோ என்ற பூரிப்பில் இருந்து வருவார்கள் என்பதில் ஆச்சர்யமில்லை.