விஜய்க்கு கைமாறு செய்த கேரள மக்கள்..! எந்த நடிகருக்கும் கிடைக்காதா பெருமை

0
1139

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய்க்கு தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் படங்கள் தமிழ் மொழியில் வெளியாவது போலவே மற்ற மொழிகளிலும் வெளியாகி வருகிறது.

- Advertisement -

தமிழ் நாட்டிற்கு அடுத்தபடியாக நடிகர் விஜய்க்கு கேரளாவில் தான் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். அதனால் கேரள மக்களுக்கும் விஜய்க்கும் எப்போதும் இணைபிரியா ஒரு பந்தம் இருந்து வருகிறார். சமீபத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நடிகர் விஜய் தனிப்பட்ட முறையில் 70 லட்ச ருபாய் நிதியுதவியும் அளித்திருந்தார்.

சமீபத்தில் நடிகர் விஜய் மீது கேரளாவில் இருக்கும் மக்கள் எந்த அளவிற்க்கு அன்பு வைத்துள்ளனர் என்று நிரூபிக்கும் விதமாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அது என்னவெனில் கேரளாவில் உள்ள ஒரு பகுதிக்கு இளைய தளபதி நகர் என்று பெயர் வைத்துள்ளனர்.

-விளம்பரம்-

vijay flood

இளையதளபதி நகர் என்று ஒரு பெயர் பலகையில் எழுதப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அண்டை மாநிலத்தில் தமிழ் நடிகர் ஒருவருக்கு கிடைத்துள்ள இந்த கௌரவம் விஜய் ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் பொறாமைகொள்ள வைத்துள்ளது.

Advertisement