காஜல் அகர்வாலுக்கு டச்சப் பாயாக மாறியுள்ள விஜய் – வீடியோ இதோ.

0
887

தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் தான். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படமும் ரிலீசுக்கு காத்துகொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஜில்லா பட ஷூட்டிங்கில் போது எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் விஜய் எப்போதும் அமைதியான மனிதர் என்று தான் அனைவரும் சொல்லி கேள்விபட்டு இருக்கிறோம். ஆனால், அவருக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களை கேட்டால் விஜய்யின் ஜாலி பக்கங்களை பகிர்வார்கள். மேலும், விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் பல சத்தமில்லாத சேட்டைகளை செய்வார் என்று பல நடிகர் நடிகைகள் சொல்லி கேள்விபட்டிருக்கிறோம்.

- Advertisement -

ஆனால், உண்மையில் அப்படி ஜில்லா பட ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் காஜல் அகர்வாலிடம் சேட்டை செய்து இருக்கிறார். 2014 ஆம் ஆண்டு நேசன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த படம் ஜில்லா. இந்த படத்தில் மோகன் லால் கூட நடித்து இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘எப்போ மாமா ட்ரீட்’ பாடலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் காஜல் அகர்வாலுக்கு முன்னாள் காண்ணாடியை நீட்டி டச்சப் பாய் போல சேட்டை செய்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாக பிறவி வருகிறது.

நடிகை காஜல் அகர்வால் ஜில்லா படத்திற்கு முன்பாகவே விஜயுடன் துப்பாக்கி படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது, மேலும், அந்த படத்திற்கு நடிகை காஜல் அகர்வாலுக்கு சிறந்த நடிகைக்கான சைமா விருதும் கூட கிடைத்தது. அதன் பின்னர் தான் ஜில்லா படத்தில் இணைந்து நடித்தார் காஜல். ஜில்லா படத்தை தொடர்ந்து விஜய்யுடன் மெர்சல் படத்தில் கூட காஜல் அகர்வால் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement