விஜய் 62 ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்த தளபதி !வைரலாகும் வீடியோ

0
1012
vijay 62

இயக்குனர் ஏ. ஆர். முருக தாஸ் இயக்கி வரும் விஜய்-62 படத்தின் ஷூட்டிங் தடைகளை மீறி நடந்து வருகிறது. விஜய் நடிக்கும் படம் என்றால் அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடித்து விடுவார்கள் விஜய் ரசிகர்கள்.நடிகர் விஜயும் தனது வீட்டில் இருக்கும் போது கூட அவ்வப்போது தனது வீட்டின் மாடியில் இருந்து நின்றுகொண்டு தனது ரசிகர்களை சந்தித்துவிடுவார்.

அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் அவரது ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென தனது ரசிகர்களை சந்தித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் விஜய்.

தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரது ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே ரசிகர்களை சந்தித்த தருணத்தை விஜய் ரசிகர் ஒருவர் தனது செல்போன் மூலம் படமெடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.