சர்கார் படத்திற்காக நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்..!வைரல் வீடியோ..!

0
284
Sarkar

பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றாலே கட் அவுட் வைப்பது பால் அபிஷேகம் செய்வது என்று ரசிகர்கள் கொண்டாடத்தில் திளைத்து இருப்பார்கள். அதிலும் விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்கள் என்றால் அவரது படங்களுக்கு இருக்கும் கொண்டாட்டங்கள் சொல்லவே தேவையில்லை.

அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள ‘சர்கார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதிரலிருந்தே விஜய் ரசிகர்கள் பேனர்கள் வைப்பது போஸ்டர்கள் வைப்பது என்று கொண்டாட்டத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் சர்கார் படத்தின் படம் வெளியாகும் போது பாலபிஷேகம் பண்ணுவது போன்ற விடயங்களை பண்ண வேண்டாம், அதர்க்கு பதில் அந்த பணத்தில் இல்லாதவர்களுக்கு உதவுங்கள் என்று விஜய் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளாராம்.

இந்த தகவலை விஜய் ரசிகர் மன்ற தலைவர் சரவணனுடன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்யின் நண்பரான நடிகர் பாலாஜி. நடிகர் விஜயின் அறிவரையை கேட்டு ரசிகர்கள் அனைவரும் பேனர்களுக்கு பாலபிஷேகம் செய்யாமல் அந்த பணத்தில் நல்ல உதவிகளை செய்வார்கள் என்று நம்புவோம்.