தமிழ் சினிமா உலகில் ஒரு மாஸ் நடிகராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய் . உலகம் முழுவதும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் தெரிக்கவிட்டது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் வீட்டில் இருக்கும் கார் குறித்து ஒரு சுவாரசியமான விஷயம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக விஜய் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இன்று அவரது வீட்டின் முன்பு அதிகமான காரர்கள் நின்று கொண்டு இருக்கிறது. அத்தன்னை கார்கள் நின்று கொண்டு இருந்தாலும் அதை அவர்கள் எளிதில் பெறவில்லை. தளபதி விஜய்யின் தந்தையம், இயக்குனருமான எஸ்.ஏ.சி அவர்கள் மூன்று படங்களுக்கு பின்பும் ஸ்கூட்டரில் தான் பயணம் செய்து கொண்டு இருந்தார்.
அப்படி ஒரு நாள் எஸ்.ஏ.சி அவர்கள் ஸ்கூட்டரில் தன் மனைவி, மகனுடன் கோடம்பாக்கம் பாலத்தின் மேல் சென்று கொண்டிருப்பதை பார்த்த பிரபல நடிகர் ஜெய்சங்கருக்கு மன கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெய்சங்கர் அவர்கள் தனது கார்களில் இருந்து ஒன்றை எடுத்துக் கொள்ளும்படி எஸ்.ஏ.சியிடம் வேண்டுகோளை வைத்துள்ளார்.
ஆனால், அதில் விருப்பமில்லாமல் எஸ்.ஏ.சி தயங்கி நின்றார். பின் ஜெய்சங்கர் சரி நீங்கள் தவணை முறையில் அதற்கான பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி தளபதி விஜய்யின் குடும்பத்திற்கு சிவப்பு கலர் அம்பாசிடர் 7121 கார் சொந்தமாகியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காருக்கு பின் தான் தளபதி விஜய் மற்ற கார்களை வாங்கினார்.