சர்கார் பாடல் மாஸ்..! எங்களுக்கும் கருண காட்டுங்க – வாய்விட்டு கேட்ட பிரபல நடிகரின் ரசிகர்கள்

0
512
Sarkar

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார் ” படத்தின் சிங்கள் டிராக் பாடல் நேற்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இருந்து “சிம்ட்டாங்கரன்” என்ற ஒரு பாடலை மட்டும் நேற்று வெளியிட்டுள்ளது சன் குழுமும்.

நேற்று மாலை 5 மணிக்கு sun nxt app லும், மாலை 6 மணிக்கு சமூக ஊடகத்திலும் “சிம்ட்டாங்கரன்” பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியகி இருந்த நிலையில்.பாடல் வெளியான 4 மணி நேரத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்ட்டுள்ளது.

இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள சர்கார் படத்தின் அணைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் தான் எழுதியுள்ளார். இதனால் இந்த படத்தின் இசை வெளியிட்டு அறிவிப்பு வெளியான நாளில் இருந்ததே விவேக்கிடம் இந்த படத்தின் பாடல் குறித்து அடிக்கடி வினாவி வந்தனர்.

vijay

மேலும், பாடலாசிரியர் விவேக் தான் நடிகர் சூர்யா நடித்து வரும் “சூர்யா38 ” படத்தின் பாடலாசிரியராக கமிட் ஆகியுள்ளார். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் சிலரும் விவேக்கிற்கு ட்விட்டர் பக்கத்தில் அன்புத்தொல்லை கொடுத்து வருகின்றனர். ட்விட்டர் பக்கத்தில் விவேக்கிடம் “சூர்யா38 ” படத்தின் பாடல் குறித்து கேட்டுள்ள ரசிகர்கள், சூர்யா படத்திற்காக காத்திருக்கிறோம். கொஞ்சம் எங்க பக்கம் வாங்க ப்ரோ. விஜய் ஃபேன்ஸ் கிட்டயே பேசுரீங்க. உங்க பாச மழைய பொழியிறீங்க. கொஞ்சம் எங்களுக்கு கருண காட்டுங்க என்று ட்வீட் செய்துள்ளனர்.