தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மிஷ்கின் திகழ்ந்து வருகிறார். இவர் இயக்கத்தில் ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் பிசாசு-2. பொதுவாகவே மிஷ்கின் படம் என்றாலே கதைக்களம் வேற லெவல் இருக்கும். அதுவும் இந்த பிசாசு 2 படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி எப்படி இணைந்தார் என்றும், மிஸ்கின் கலை பற்றியும் இயக்க திறமைகளை குறித்தும் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதி அவர்கள் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது, மிஷ்கின் அவர்களுடைய பல நேர்காணல்களில் அவர் நான் அகிர குரோசோவோவுடன் 10 வருடம் டிராவல் பண்ணினேன் என்று சொல்லியிருப்பார். இவர் அகிர குரோசோவோ படம் தானே பார்த்திருப்பார். எப்படி டிராவல் பண்ணியிருக்க முடியும்? என்ற எண்ணம் நமக்கு வரும். உண்மை என்னவென்றால் திருவள்ளுவர் இப்போது இல்லை. ஆனால், அவரின் குறள் வழியாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதைப் போன்ற உறவு தான் அகிர குரோசோவோ-மிஷ்கினின் உறவு. அதை நான் அவரை சந்தித்த பிறகு தான் உணர்ந்தேன்.

இதையும் பாருங்க : நீச்சல் உடையில் கடல் கன்னி போல கடலுக்கடியில் நீந்திய விஷாலின் Ex காதலி.

Advertisement

சைகோ படத்தை பார்த்த பிறகு அவர் அகிர குரோசோவோ உடன் எவ்வாறு ட்ராவல் பண்ணார் என்பதை உணர்ந்தேன். உண்மையில் சைக்கோ படம் பார்த்து நான் பிரமித்துப் போனேன். அந்த படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. பின் ஒரு நாள் இயக்குனர் மிஷ்கின் தொடர்புகொண்டு நான் படம் குறித்து பாராட்டு தெரிவித்தேன். பிறகு இருவரும் ஒரு நாள் நேரில் சந்தித்து பேசினோம்.

அப்போது அவர் பிசாசு 2 கதையை சுருக்கமாக சொன்னார். பிசாசு படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எப்படி உருவாக்கி வைத்திருக்கிறார் என்று அவர் சொல்லும்போது ஒரு சினிமா கலைஞனாக நான் ஆச்சரியமும் பெருமிதமும் கொண்டேன். இந்த பிசாசு படத்தில் எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை தந்துள்ளார். அவருடன் இணைந்து படம் பண்ணும் போது என்னால் சினிமாவை நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று பேசியுள்ளார்.

Advertisement
Advertisement