கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளையதளபதி விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிகில் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் நெய்வேலியில் இருந்தபோது வருமானவரித் துறையினர் அங்கிருந்து விஜயை நேராக அழைத்து சென்று அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். விஜய் வீட்டில் மட்டுமல்லாமல் பிகில் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

மேலும், இந்த சோதனையில் வருமான வரி கணக்கில் காட்டப்படாத 77 கோடி ரொக்கப்பணம் மற்றும் கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் விஜய் வீட்டில் இருந்து எந்த ஆவணமும் சிக்கியதா இல்லையா என்று வருமான வரித்துறையினர் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. வருமான வரித்துறையின் சோதனை முடிந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படத்தின் படபிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டார் நடிகர் விஜய். இந்த நிலையில் நடிகர் விஜய் தனது ரசிகர்களை மதம் மாற தூண்டுவதாக சமூக வலைதளத்தில் பரவியது.

Advertisement

இதையும் பாருங்க : அஜித் சார் அவ்வளவு சூப்பராக லவ் சொன்னாரு- அஜித் ஷாலினி லவ் ஸ்டோரியை சொன்ன இயக்குனர்.

அதில், கிறிஸ்துவக்குழுக்கள் விஜய் மூலமாக தமிழகத்தில் காலூன்ற நினைப்பதாகவும், இதை ஜேப்பியாரின் மகள் ரெஜினா இயக்கமாக முன்னெடுத்திருப்பதாகவும் இதில் நடிகர் விஜய் சேதுபதி, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டோர் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டதாகவும் இதற்கான நிகழ்ச்சி வடபழனியில் நடந்தது. முதற்கட்டமாக இந்த நடிகர்களும், இவர்கள் அடுத்தடுத்து சினிமாத்துறையில் பல நடிகர்களை கிறிஸ்துவ மதத்துக்கு மதம் மாற்ற முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணம் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் தரப்படுவதாகவும்.

Advertisement

Advertisement

அமித் ஷா மற்றும் மோடி விதித்திருக்கும் பல்வேறு தடைகளைத் தாண்டி இந்தப் பணம் வந்து பிகில் படத்தில் முதலீடு செய்திருப்பதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பிடிருந்தது. மேலும், இந்த குறிப்பிட்ட பதவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர நடிகர் விஜய் சேதுபதி அந்த பதிவை பகிர்ந்து ‘ போயி வேற வேலை இருந்தா பாருங்கடா ‘ என்று மிகவும் ஆவேசத்துடன் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இது விஜய் மற்றும் விஜய் சேதுபதி கிறிஸ்துவ அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்பது பொய்யான வதந்தி என்பது தெளிவாக தெரிந்துள்ளது.

Advertisement