அஜித் சார் அவ்வளவு சூப்பராக லவ் சொன்னாரு- அஜித் ஷாலினி லவ் ஸ்டோரியை சொன்ன இயக்குனர்.

0
9316
ajith shalini
- Advertisement -

தமிழ் சினிமா பிரபலங்களில் புது புதுசா பல தம்பதியர்கள் வந்தாலும் அனைவருக்கும் முதலில் மனதில் தோன்றுவது அஜித்- ஷாலினி ஜோடி தான். இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் பட்டியலில் சினியர் என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி. திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்தி விட்டு குடும்பதத்தை கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி. கடைசியாக இவர் பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் தான் நடித்திருந்தார். திருமணத்திற்கு பின்னர் அஜித் – ஷாலினி தம்பதியருக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர்.

-விளம்பரம்-
Image result for charan amarkalam

- Advertisement -

மேலும்,1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்த படம் அமர்க்களம். இந்த படத்தில் தான் ஷாலினியும் அஜித்தும் இணைந்து ஜோடியாக நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த படத்தின் போது அஜித் அவர்கள் ஷாலினி இடம் தன்னுடைய காதலை கூறியுள்ளார். அதற்கு ஷாலினி என்னுடைய பெற்றோர்களிடம் பேசுங்கள் என்று சொன்னார். பின் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது தான் நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால், தல அஜித் அவர்கள் முதன் முதலாக தன்னுடைய காதலை ஷாலினிடம் எப்படி சொன்னார் என்பதை இயக்குனர் சரண் தற்போது கூறி உள்ளார். இயக்குனர் சரண் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

இதையும் பாருங்க : அஜித்துக்கு தங்கச்சி, ஆனால் விஜய்க்கு? பாடகி சிவாங்கியை வெளுத்து வாங்கிய தளபதி ரசிகர்கள்.

-விளம்பரம்-

அதில் அஜித்,ஷாலினி காதல் குறித்து பல சுவாரசியமான விஷயங்களை கூறியுள்ளார். அதில் அவர் கூறியது, அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் போய் கொண்டு உள்ளது. அப்ப தான் அஜித் அவர்கள் முதன் முதலாக ஷாலினி கிட்ட ப்ரொபோஸ் பண்ணாரு. அதுவும் நேரடியாக ஷாலினி கிட்ட சொல்லல. நாங்க எல்லோரும் உட்கார்ந்துட்டு இருந்தோம். ஷாலினி அவங்க மேக்கப் பண்ணிட்டு இருந்தாங்க. அங்க நான் உட்கார்ந்து இருந்தேன். என் பக்கத்தில் அஜித் நான் உட்கார்ந்து இருந்தார். அப்ப அவர் என்கிட்ட இந்த படத்தை சீக்கிரமா முடிச்சிடுங்கன்னு சொன்னாரு.

வீடீயோவைல் 17 நிமிடத்தில் பார்க்கவும்

நானும் ஓகே, ஹீரோ கால்ஷீட் கிடைப்பது கஷ்டம் தானே, இவரே முடியுன்னு சொல்லும் போது உடனே எனக்கு ஜாக்பாட் தானே. நான் ரெடியா இருக்கேன் சார் முடிச்சிடலான்னு சொன்னேன். ஆனா, அதுக்கு அவரு நான் ஏன் சொல்றேன்னா, இந்த பொண்ண நான் லவ் பண்ணிட்டுவேன்னு பயமா இருக்கு. அதனால சீக்கிரமா முடிச்சிடுங்கன்னு சொன்னாரு. இதைக் கேட்டவுடனே ஷாலினி முகத்தை பார்த்தா பயங்கர ஷாக். எனக்கே ஷாக் ஆயிடுச்சி. அந்த அளவுக்கு ஒரு அழகா, ஓபனா, நாசுக்கா, டீசன்ட்டா யாரும் காதல வெளிப்படுத்த முடியாது. ஆனா, அஜித் சார் அவ்வளவு சூப்பராக லவ் சொன்னாரு. இது என்னால மறக்கவே முடியாத தருணம் என்று கூறினார்.

Advertisement